உலகம் முழுவதும் தனெக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டு இருப்பவர் தளபதி விஜய். பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நடித்து உள்ள படம் “மாஸ்டர்”. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. சமீபத்தில் தான் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடை பெற்றது. இந்த விழாவில் மாஸ்டர் படம் பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

Advertisement

மேலும், இந்த படத்தில் பல துணை நடிகர்கள் நடிக்கிறார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் பரீட்சயமான நடிகர் மகேந்திரன். இவர் இந்த படத்தில் நடித்து உள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியதும், விஜய் அண்ணா ஓன்னும் அவங்க அப்பாவோட உதவியால் இந்த அளவிற்கு வரவில்லை.

அவருடைய கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் சினிமாவில் இந்த அளவிற்கு உயர்ந்து உள்ளார். அதே போல் தல அஜித்தும் தன்னுடைய தன்னம்பிக்கையாலும், கடின உழைப்பினாலும் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இடம் பிடித்து உள்ளார். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரங்கள். ஆகவே இவர்கள் இருவருடைய விடாமுயற்சி தான் திரையுலகில் மிகப் பெரிய இடத்தில் உள்ளார்கள்.

Advertisement

இதை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று வெளிப்படையாக கூறியிருந்தார். தற்போது இவர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. நடிகர் மகேந்திரன் இந்த குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். அதற்கு பிறகு கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்து உள்ளார். பின் இவருக்கு பெரிதும் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Advertisement

அதோடு சமீப காலமாக இவருடைய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இவர் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து உள்ளார். இவர் விஜய் உடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, மின்சாரக் கண்ணா போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். பல வருடங்கள் கழித்து மீண்டும் மாஸ்டர் படத்தில் விஜயுடன் இணைந்து மகேந்திரன் நடித்திருக்கிறார். தற்போது இவர் தன்னுடைய பெயரை மாஸ்டர் மகேந்திரன் என்றும் மாற்றி உள்ளார்.

Advertisement