முதன் முறையாக நீச்சல் உடை புகைப்படத்தை பதிவிட்ட மாஸ்டர் நடிகை மாளவிகா – ஷாக்கான ரசிகர்கள்.

0
16213
malavika

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும், சசி குமாரின் ஜோடியாக நடித்திருந்தார்.

View this post on Instagram

? ? @amrithakarnakardesign

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். கன்னடம், மலையாளம், இந்தியை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம்இறங்கினர். இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார் மாளவிகா.

- Advertisement -

அதன் பின்னர் சமூக வலைத்தளத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் படத்தில் நடித்த இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அம்மணி இந்த படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் கூட நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கம். இந்த நிலையில் முதன் முறையாக நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் மாளவிகா. மாஸ்டர் படத்திற்கு பின்னர் அடுத்து என்ன படத்தில் நடிக்க இருக்கிறார் என்று பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement