சந்தானம் இவங்களுக்கு லெட்டர் கொடுத்தது தப்பே இல்ல - மாஸ்டர் பட நடிகையின் கிளாமரை பார்த்து வர்ணிக்கும் நெட்டிசன்கள்.

By Rajkumar · 15/5/2021

சினிமாவை பொறுத்த வரை முன்னணி நடிகர் நடிகைகளை விட துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான் பல்வேறு படங்களில் தோன்றுகின்றனர். அந்த வகையில் தெய்வ திருமகள் படத்தில் எம் எஸ் பாஸ்கரின் மனைவியாக நடித்த சுரேகா வாணியும் ஒருவர். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் உத்தமபுத்திரன் படத்தில் அறிமுகமானார். தெலுங்கில் 2005 ஆம் ஆண்டு முதல் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வெளியான உத்தம புத்திரன் படத்திற்கு பின்னர் பல தமிழ் படங்களில் நடித்துளளார்.

‘தெய்வதிருமள்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில்லா’, ’பிரம்மா’, ‘எதிர் நீச்சல்’, ‘மெர்சல்’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்ததார். ஆனால், தமிழ் சினிமாவை விட அம்மணி தெலுங்கு சினிமாவில் தான் மிகவும் பிரபலம்.தெலுங்கில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். சினிமாவில் பெரும்பாலும் குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே தோன்றும் இவர் நிஜ வாழ்வில் செம்ம மாடர்ன் பேர்வழியாக இருந்து வருகிறார்.

இதையும் பாருங்க : 20 ஆண்டுக்கு முன் டிடிக்கு முதல் தொகுப்பாளினி வாய்ப்பு கொடுத்தது நபர் பகிர்ந்த டிடியின் அறிய புகைப்படம்.

மேலும், இவருக்கு முடிந்து பள்ளி செல்லும் வயதில் இரண்டு பெண் குழந்தையும் இருக்கிறார். திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகளுக்கு தாயக உள்ள சுரேகாவின் கணவர் சமீபத்தில் தான் காலமானார். சமீபத்தில் தான் இவர் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவிக்கும் நிலையில் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவர்க்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக படு கிளாமர் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் சிலர், இவர் சந்தானத்துடன் நடித்த பிரம்மன் படத்தின் இருந்து சந்தானம் இவருக்கும் காதல் கடிதம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதனை மீமாக போட்டுள்ளனர். அதில் சந்தானம் உங்களுக்கு லெட்டர் கொடுத்தது தப்பே இல்ல என்று கூறியுள்ளனர். அந்த மீமை பார்த்து கோப்படாமல் அதனை தனது இஸ்னாட்க்ராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full