20 ஆண்டுக்கு முன் டிடிக்கு முதல் தொகுப்பாளினி வாய்ப்பு கொடுத்தது நபர் பகிர்ந்த டிடியின் அறிய புகைப்படம்.

0
2263
dd
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரை பெரும்பாலும் டிடி என்று தான் செல்லமாக அனைவரும் அழைப்பார்கள். இவர் 20 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி. நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள்.

-விளம்பரம்-

திவ்யதர்ஷினி அவர்கள் முதலில் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், நடுவராகவும் இருந்து வருகிறார். டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மூன்று வருடங்களே நிலைத்த இவர்களது திருமணம் 2017 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.

- Advertisement -

இவர்களின் விவாகரத்துக்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வந்தனர். ஆனால், அதையெல்லாம் தாண்டி தன்னுடய துறையில் ஒரு வெற்றிகரமான பெண் மணியாக திகழ்ந்து வருகிறார் டிடி. அதே போல 36 வயதை கடந்த டிடி இன்னமும் சிங்கிளாக தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இப்படி ஒரு கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவருக்கு விருது ஒன்று வழங்கப்பட்டது.

அந்த விருதினை விஜய் டிவியில் பல ஆண்டுகளாக விஜய் டிவியின் ப்ரோக்ராமிங் ஹெட்டாக பணியாற்றி வரும் பிரதீப் என்பவர் தான் கொடுத்தார். அப்போது பேசிய அவர் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு 19 வயது பெண்ணை ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக அறிமுகம் செய்தேன் அது தான் டிடி என்று கூறி இருந்தார். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement