ஹீரோயினா நடிக்க வாய்ப்பு வந்துச்சி நான் வேணான்னு சொல்லிட்டேன், ஏன்னா ? - ரம்யா சொன்னகாரணம்.

By Rajkumar · 6/2/2021

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ பெண் தொகுப்பாளனிகள் வந்தாலும் ஒரு சில பெண் தொகுப்பாளினிகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். டிடிக்கு பின்னர் விஜய் டிவியில் பிரபலமானது ரம்யா தான். இவருக்கு பின்னர் தான் பாவனா, பிரியங்கா எல்லாம் வந்தார்கள். டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா.

பின் டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா என்று பல்வேறு விழாக்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். பின் ரம்யா அவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : என்னை அறிந்தால்ல முதன் முறையா அவருக்கு வில்லனா நடித்தேன். அத தூக்கிட்டாங்க. தீனா பட நடிகர் பேட்டி.

அதன் பின்னர் ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி,ஆடை போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய ரம்யா, தற்போது இளைய தளபதி நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் நடித்து இருந்தார் ரம்யா. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதவிடுபவது வழக்கம். அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் எப்போதாவது படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளீர்களா என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ரம்யா. ஆம், ஆனால் அந்த படத்தின் வாய்ப்பை இழந்ததற்க்காக நான் வருத்தப்படவில்லை. அதை ஏன் மறுத்தேன் என்றால் நான் என் உள் உணர்வையும் மனது சொல்வதையும் தான் கேட்பேன். எனவே, நான் சரியான முடிவை தான் எடுத்தேன் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full