என்னை அறிந்தால்ல முதன் முறையா அவருக்கு வில்லனா நடித்தேன். அத தூக்கிட்டாங்க. தீனா பட நடிகர் பேட்டி. Unseen வீடியோ இதோ.

0
9904
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் தான் தல அஜித். இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார். அஜித் அவர்கள் சினிமா துறையில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். அதிலும் கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை ,விஸ்வாசம் ஆகிய படங்கள் பட்டையை கிளப்பியது . இதனை தொடர்ந்து தற்போது அஜித் அவர்கள் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், 2015 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் அஜித் குமார், திரிஷா, அனுஷ்கா ஷெட்டி, அருண் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் இன்றோடு வெளியாகி 6 வருடங்கள் ஆகிவிட்டது.

-விளம்பரம்-
தீனா படத்தின் போது அஜித்துடன் சம்பத் ராம்

இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. இந்த படத்தில் ஒரு காட்சியில் நடிகர் சம்பத் ராம் அவர்கள் நடித்து இருந்தார். ஆனால், அவர் நடித்த காட்சி வெளியிடவில்லை. தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானார் சம்பத் குமார். இவர் முதலில் ஸ்டண்ட் நடிகராக தான் சினிமா உலகில் நுழைந்தார். இந்நிலையில் தல அஜித்துடன் படங்களில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் சம்பத் ராம் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இதையும் பாருங்க : களத்தில் சந்திப்போம் படத்தை காண ஆரி, சனம் மட்டும் ஏன் வரல – அழைக்கவில்லையா ஜித்தன் ரமேஷ் ? காரணம் இதானாம்.

- Advertisement -

அதில் அவர் கூறியது, நான் தல அஜித்துடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். உன்னை கொடு என்னை தருவேன், தீனா, ரெட் போன்று பல படங்களில் அவருடன் நண்பராக நடித்து இருக்கிறேன். அஜித்துடன் தீனா படம் பண்ணும் போது சண்டைக் காட்சி ஒன்றில் என்னுடைய மார்பில் அஜித் உதைத்தார். நான் கீழே போய் விழுந்து விட்டேன். அப்போது உடனடியாக அவர் என்னை தூக்கி நிறுத்தி ஸ்டண்ட் பயிற்சிகளை கற்றுக் கொள்ளுங்கள். அப்போது தான் அடிபடாமல் எப்படி நடிப்பது என்பதை கற்றுக் கொள்ள முடியும் என்ற டிப்ஸை கூறினார். ஆனால், என்னை அறிந்தால் படத்தில் மட்டும் நான் அவருக்கு வில்லனாக நடித்து இருந்தேன்.

வீடியோவில் 2 : 31 நிமிடத்தில் பார்க்கவும்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் நான் நடித்து இருந்தேன். ஆனால், நான் நடித்த காட்சி படத்தில் இடம் பெற வில்லை. என்னுடைய இத்தனை வருட சினிமா பயணத்தில் நான் நடித்த காட்சி வராத ஒரே படம் என்னை அறிந்தால் படம் மட்டும் தான். நான் இந்த படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் தான் நடித்து இருந்தேன். இதுவரை நான் அஜித் அவர்களுடன் இணைந்து நடித்த படங்களில் இந்த படத்தில் தான் நான் அஜித்துக்கு வில்லன் ஆட்களாக நடித்து இருந்தேன். இந்த படத்தில் நான் ஒரே ஒரு காட்சியில் நடித்து இருந்தாலும் செம்ம சூப்பராக இருக்கும்.

-விளம்பரம்-
என்னை அறிந்தால் படத்தில் சம்பத் ராமின் நீக்கப்பட்ட காட்சி

ஆனால், எடிட்டிங் வேலையில் வேற ஆப்ஷன் இல்லாமல் அந்த காட்சியை நீக்கி விட்டார்கள். என்னுடைய காட்சி நல்லா வந்திருந்தால் படம் ரிலீசுக்கு முன்னால் என்னுடைய காட்சியை ட்ரெய்லரில் போட்டு விட்டார்கள். மேலும், படம் நாளை வெளியிடுவதற்கு முன்னால் தான் அசோசியேட்டில் இருந்து கால் பண்ணி உங்களுடைய காட்சி எடிட்டிங் வேலையில் நீக்கப்பட்டது. நீங்கள் படம் பார்த்து விட்டு மனம் வருத்தப்படக் கூடாது என்பதற்காக தான் கால் பண்ணி சொன்னேன் என்று சொன்னார். என்னுடைய காட்சி படத்தில் வரவில்லை என்றாலும் ட்ரெய்லரில் வந்ததால் எனக்கு சந்தோசமாக இருந்தது என்று கூறினார்.

Advertisement