தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக பட்டைய கிளப்பி கொண்டு வருபவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் தெறிக்க விட்டது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் படம் "மாஸ்டர்". மாநகரம்,கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அதே போல இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.
https://twitter.com/sridhar_sri__/status/1225783242994774016
இவர்களுடன் படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிக மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய் அவர்களை வருமான துறையினர் சோதனைக்காக அழைத்து சென்றார்கள். இது சமூக வலைதளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இதனை தொடர்ந்து விஜய் அவர்களின் வீட்டில் எந்த ஒரு ஆவணமும் கிடைக்கவில்லை என்றும் செய்திகள் வெளிவந்தது. இந்த பிரச்சினை ஒரு வழியாக சுமுகமாக முடிவடைந்தது. இதனால் நெய்வேலியில் நடக்கும் படப்பிடிப்பு தளபதிற்கு விஜய் மீண்டும் சென்றார். இந்த நிலையில் பாஜகவினர் இந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று போராட்டம் செய்து வருகிறார்கள். இதனால் விஜய்க்கு ஆதரவாக நின்ற ரசிகர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும், ரசிகர்கள் போராட்டம் செய்கிறார்கள்.
இதனால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கலவரம் ஏற்பட்டது. இது சம்மந்தமாக கலவரம் நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. எப்போதுமே தளபதி விஜயின் படம் என்றாலே படப்பிடிப்பு தொடங்கிய நாட்களிலிருந்து படம் வரை வெளிவரும் வரை பல பிரச்சனைகளும், சிக்கல்களும் இருந்து தான் வருகிறது. அதுவும் இந்த முறை பயங்கரமாக பல பிரச்சினைகளை எதிர்க் கொண்டு வருகிறது மாஸ்டர் படம். இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளார்கள்.





