-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

‘நான் பெரிய உத்தமி இல்லை’ – படு ஓப்பனாக பேசிய விக்ரம் படம் நடிகை.

0
1262
maya

நான் ஒன்னும் உத்தமி இல்லை என்று பேட்டியில் விக்ரம் பட நடிகை கூறியிருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள்.

விக்ரம் திரைப்படம்:

விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. அதோடு இதுவரை இல்லாத அளவிற்கு கமலின் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் கமல் ரொம்ப எமோஷனலாக இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் இயக்கம் தான். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜுக்கு 80 லட்சம் மதிப்பில் கார் ஒன்றை பரிசளித்து இருந்தார் கமல்.

கமல் கொடுத்த பரிசு:

-விளம்பரம்-

அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜுன் 13 உதவி இயக்குனர்களுக்கு பைக்கும், சூர்யாவிற்கு 40 லட்சம் பாதிப்புள்ள ஒரு rolex கைக்கடிகாராத்தையும் பரிசாக கொடுத்து இருந்தார் கமல். மேலும், இந்த படம் இதுவரை சுமார் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி 25 நாட்களே கடந்துள்ள போதும் இன்னும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது.
அந்த அளவிற்கு விக்ரம் படம் மக்களை கவர்ந்திருக்கிறது.

-விளம்பரம்-

படத்தில் மாயா ரோல்:

படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் ஞாபகம் வைத்துக்கொள்ளும் வகையில் லோகேஷ் கனகராஜ் செதுக்கி இருக்கிறார். அந்த வகையில் இந்த படத்தில் விபச்சாரியாக நடித்தவர் மாயா. இவருடைய கதாபாத்திரம் ஒரு சில சீன்கள் மட்டும் வந்திருந்தாலும் படத்தில் செம பர்பாமன்ஸ் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் விக்ரம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை மாயா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

மாயா அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருந்தது, விக்ரம் படத்தில் நான் விபச்சாரியாக நடித்திருக்கிறேன். இதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. படத்திற்கு என்ன தேவையோ அப்படி நடிப்பது தான் என்னுடைய வேலை. நான் பெரிய உத்தமி இல்லை என்று கூறியிருக்கிறார். இப்படி மாயா அளித்த பேட்டியை பார்த்த பலரும் என்ன மேடம் இப்படி ஓபனாக பேசிடீங்களே? என்று வியப்பில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news