மயில்சாமி கடைசியாக சென்ற கோவிலின் கருவறையில் அவரது உருவப்படத்தை வைத்து வழிபாடு நடத்தி இருக்கும் சம்பவம் தற்போது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகங்களை கொண்டவர்.1985 ஆம் ஆண்டு கன்னிராசி படத்திலும் டெலிவரி பாய் வேடத்தில் நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் கமல் விஜயகாந்த் சத்யராஜ் என்று பல நடிகர்களை தொடர்ந்து இன்றைய தலைமுறை நடிகர்களான விஜய் அஜித் விக்ரம் சூர்யா விஷால் என்று பல நடிகர்களின் படத்திலும் நடித்திருக்கிறார்.இப்படி ஒரு நிலையில் கடந்த சிவராத்ரி அன்று மயில்சாமி மாரடைப்பால் மரணமடைந்தார்.

மயில்சாமி தீவிர சிவ பக்தன், இதனால் அடிக்கடி திருவண்ணாமலைக்கு சென்று அருணாசலேஸ்வரரை வழிபடுவார். இப்படி ஒரு நிலையில் மயில்சாமியின் இறப்பை தொடர்ந்து உடலுக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பூஜிக்கப்பட்ட வெட்டி வேர் மாலை, அணிவிக்கப்பட்டது. மயில்சாமியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற அண்ணாமலையார் கோவிலின் குருக்கள் கோவில் நிர்வாகம் சார்பில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 

Advertisement

இப்படி ஒரு நிலையில் மயில்சாமி இறுதியாக சென்ற கோவிலில் அவரது புகைப்படத்தை கருவறையில் வைத்து பூஜிக்கபட்ட நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.சென்னையை அடுத்த இருக்கும் தாம்பரத்தில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் மேலகண்டிகை என்னும் இடத்திற்கு அருகேயுள்ள மேலகோட்டையூரில் உள்ள அருள்மிகு ‘ஸ்ரீ மேகாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாதேஸ்வரர் ஆலயம்.

மயில்சாமியின் வீட்டில் இருந்து 40 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் இந்த கோவிலுக்கு தான் மயில் சாமி கடந்த சிவராத்திரி அன்று இரவு பூஜைகாக சென்று சிவனை வழிபட்டார். மேலும் அந்த கோவிலில் சிவராத்திரி இசை கச்சேரிக்கான செலவையும் மயில்சாமி தான் பார்த்துக் கொண்டார். இந்த கோவிலில் பூஜையை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது தான் மயில்சாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானர்.

Advertisement

 இந்த கோவிலில் ரஜினிகாந்தை அழைத்து வந்து பாலபிஷேகம் செய்ய வேண்டும் என மயில்சாமி விருப்பப்பட்ட சூழலில் அது நிறைவேறாமல் போனது. தொடர்ந்து, மயில்சாமி இறுதி சடங்கிற்கு வந்த ரஜினிகாந்த், மயில்சாமியின் இறுதி ஆசையை நிறைவேற்றுவேன் என்றும் தெரிவித்தார். இப்படி ஒரு நிலையில் அந்த கோவிலின் கருவறையில் மயில்சாமியின் புகைப்படத்தை சிறப்பு பூஜை செய்து இருக்கின்றனர்.

Advertisement

பல ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு மயில்சாமி திருப்பணி ஆற்றி வந்ததாகவும், அவருடைய ஆன்மா சாந்தியடையவே இப்படி ஒரு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டதாக கோவில் அர்ச்சகர் கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமுக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதே போல இது மிகவும் தவறு மயில்சாமி கடவுள் பக்தி கொண்டவராக இருக்கலாம், அதற்காக அவர் கடவுள் ஆகிவிட முடியாது என்று ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement