தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் மயில்சாமி. ரஜினிகாந்த் கமல் விஜயகாந்த் சத்யராஜ் என்று பல நடிகர்களை தொடர்ந்து இன்றைய தலைமுறை நடிகர்களான விஜய் அஜித் விக்ரம் சூர்யா விஷால் என்று பல நடிகர்களின் படத்திலும் நடித்திருக்கிறார். இதுவரை இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் இறுதியாக உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி மற்றும் ஆரிய பாலாஜி நடித்த வீட்ல விசேஷங்க போன்ற படங்களில் நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்று இரவு மயில்சாமி மாரடைப்பால் காலமாக இருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சிவராத்திரி பூஜை நடைபெற்றது. இதில் ட்ரம்ஸ் சிவமணி பங்கேற்று இசை கச்சேரி செய்து இருந்தார். இதில் மயிலசாமியும் கலந்துகொண்டு இருந்துள்ளார். விடிய விடிய சிவராத்திரி பூஜையில் இருந்துவிட்டு பின்னர் வீட்டிற்கு சென்று இருக்கிறார். சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது அவருக்கு திடீர் மரடைப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து இருக்கிறது. ஏற்கனவே இவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தது கடந்த டிசம்பர் மாதமே இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மயிலசாமி தீவிர சிவ பக்தர், இவர் ஒவ்வொரு கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலைக்கு சென்று சிவனை வழிபடுவதும் வழக்கம், தீவிர சிவ பக்தரான இவர் நேற்று சிவராத்திரி தினத்தில் சிவனடி சேர்ந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மயில்சாமியின் இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் மட்டுமல்லாது அரசியல் பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் விஜய் டிவி Kpy பிரபலம் பழனி பட்டாளம், மயில்சாமி மேடை கலைஞராக இருந்த போது எடுக்கப்பட்ட ஒரு அறிய புகைப்படத்தையும் அதன் சுவாரசியமான பின்னணி ஒன்றை குறித்தும் பதிவிட்டு இருக்கிறார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பழனி பட்டாளம் : –

Advertisement

1990 -வருடத்தில் அண்ணன் மயில்சாமி அவர்கள் லக்ஷ்மணன் அவர்களோடு இணைந்து சுருதி இசை குழு ஆரம்பித்து என் வீட்டில் கட்டியுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில் இசை கச்சேரி நடத்தினார்கள் மயில்சாமி அண்ணனுக்கு நினைவு பரிசு வழங்குபவர் என்னுடைய அப்பா முத்து அப்பொழுது எனக்கு 8 வயது இருக்கும் அவர் நிகழ்ச்சியை நேரில் பார்த்து தான் நான் மிமிக்ரி பண்ண ஆரம்பித்தேன் சமீபத்தில் அவரை சந்திக்கும் போது இதை சொல்லி நினைவு படுத்தி இருக்கேன்.

Advertisement

இன்று அவர் இறப்பு மிகவும் வேதனையை அளிக்கிறது அண்ணாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்’ என்று கூறியுள்ளார். மயில்சாமி நேற்று இரவு காலமான நிலையில் அவரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகரில் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சென்னை வடபழனி ஏவிஎம் மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Advertisement