சமீபத்தில் மாரடைப்பால் காலமான மயில்சாமி தந்து மகனுக்கு திமுக பிரபலத்தின் மகளுக்கு திருமணம் முடித்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா கலைவாணர் முதல் தற்போது சந்தானம், சூரி வரை காமெடிக்கு பஞ்சம் இல்லாத படங்களை கொடுத்து வருகிறது. காலத்திற்கு பல காமெடி நடிகர்கள் வந்து முத்திரை பதித்து வருகின்றனர். காமெடி நடிகர்கள் என்றதும் நம் நினைவிற்கு வருவது கவுண்டமணி செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம் என்று இவர்கள் தான் நினைவிற்கு வரும்.

இதில் மயில்சாமிக்கு நிச்சயம் ஒரு தனி இடம் உண்டு. நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகங்களை கொண்டவர்.1985 ஆம் ஆண்டு கன்னிராசி படத்திலும் டெலிவரி பாய் வேடத்தில் நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் கமல் விஜயகாந்த் சத்யராஜ் என்று பல நடிகர்களை தொடர்ந்து இன்றைய தலைமுறை நடிகர்களான விஜய் அஜித் விக்ரம் சூர்யா விஷால் என்று பல நடிகர்களின் படத்திலும் நடித்திருக்கிறார்.

Advertisement

மயில்சாமி மறைவு :

இதுவரை இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் இறுதியாக உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி மற்றும் ஆரிய பாலாஜி நடித்த வீட்ல விசேஷங்க போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால், சமீப காலமாக இவரை அதிக படங்களில் காண முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் கடந்த 18ஆம் தேதி இரவு மயில்சாமி மாரடைப்பால் காலமாக இருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மயில்சாமி கடைசியாக உடல் பால் என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மயில்சாமி :

இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எந்த அரசியல் கட்சி தலைவர்களையும், போராட்டக்காரர்களையும் அனுமதிக்க வில்லை. ஆனால், மக்களின் ஆதரவு பெற்ற சில நடிகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். அதில் மக்களுக்கு குரல் கொடுத்து நின்றவர் மயிலசாமி. அந்த போராட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன்னுடைய கருத்தை சொல்லி மத்திய மாநில அரசை விமர்சித்து பயங்கரமாக பேசியிருந்தார் நடிகர் மயிலசாமி.

Advertisement

அருமொழி முகநூல் பதிவு :

இந்நிலையில் மறைந்த நடிகர் மயில்சாமி குறித்து சோழசேனை அமைப்பின் நிறுவனரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒருங்கிணைத்த மாணவர்களில் ஒருவரான அருமொழி சதீஷ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவில் “சமீபத்தில் நடிகர் மயில்சாமி மறைந்த போது, பல பதிவுகளை பார்க்க முடிந்தது. ஆனால் அவரோடு சம்மந்தப்பட்ட ஏதோ ஒன்றை மறந்தது போல எனக்கு ஒரு உள்ளுணர்வு. பகாசூரன் திரைப்பட இயக்குனர் திரு.மோகன் ஜி அவருடனான, பழைய மெசெஜ் சாட்டுகளை பார்த்த போது ஒரு வரலாற்றுத்தகவல் கிடைத்தது.

Advertisement

எதற்காக இந்த பதிவு :

2017 ஆம் ஆண்டு இரண்டாவதாக நடந்த மெரினா ஜல்லிக்கட்டு, முதல் நாளிலேயே உணர்வோடு போராட்ட களத்திற்கு வந்த முதல் நடிகர் திரு.மயில்சாமி அவர்கள். பிறகு தான் அத்துனை பிரபல நடிகர்களும், இன்ன பிற துணை நடிகர்களும் வந்தனர். இதனை எதற்காக எடுத்து பதிவிட வேண்டியிருக்கிறது என்றால், இது ஆவணப்படுத்தவில்லை என்றால், வேறொருவரை முன்மாதிரியாக காட்டிவிட்டு போய்விடுவார்கள் என்று பதிவிட்ட அவர் “பகாசூரன்” இயக்குனர் மோகன்ஜியுடன் பேசிய பதிவையும் அந்த முகநூல் பதிவில் இணைத்துள்ளார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement