கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் வாழ்ந்த வீட்டை மேயர் தன்னுடைய சொந்த செலவில் சீரமைத்து வரும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரை உலகில் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகராகவும், பாடகராகவும் இருந்தவர் என் எஸ் கிருஷ்ணன். இவர் நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரியில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதிலேயே சினிமாவின் மீது அதிக ஆர்வம். இதனால் இவர் தன்னுடைய இளம் பருவத்திலேயே கலை வாழ்க்கையை தொடங்கினார்.

பின் இவர் நாடகத் துறையில் நுழைந்தார். அதன் பிறகு இவர் சினிமாவில் நடித்தார். மேலும், இவர் சொந்தமாக நாடக கம்பெனியும் நடத்தி இருந்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் என்.எஸ் கலைவானார். சதி லீலாவதி என்ற படத்தின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்தார். இவரை அனைவரும் கலைவாணர் என்று தான் செல்லம்மா அழைப்பார்கள்.

Advertisement

நகைச்சுவையில் கலைவாணர் :

பின்பு இவர் பாடகராகவும் இருந்தார். இவருடைய நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை கொடுத்து சிரிக்க வைப்பது, மட்டும் இல்லாமல் சிந்திக்கவும் வைத்தார். இவருடைய நகைச்சுவைக்கு என்றே ஒரு தனி பாணி இருந்தது. மேலும், பிறர் மனதை புண்படுத்தாமல் நகைச்சுவையை கையாளும் திறமையை படைத்தவர் கலைவாணர். இந்தியாவிலேயே இவர் ஈடு இணையற்ற நகைச்சுவை நடிகராக விளங்கியவர். இப்படிப்பட்ட கலைஞர் என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் 1957 ஆம் ஆண்டு உடல் நல குறைவால் இறந்துவிட்டார்.

கலைவாணர் இறப்பு:

அப்போது இவருக்கு 49 வயது தான். மேலும், இவருடைய இறப்பிற்கு தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல் அரசாங்கமும் மரியாதை செலுத்தி இருந்தது. பின் தமிழ்நாடு அரசு என் எஸ் கிருஷ்ணன் நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என பெயர் வைத்திருந்ததார்கள். இந்த அரங்கத்தில் அரசாங்கம் விழாக்களும், பொது நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் வீட்டை மேயர் சீர்படுத்த இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement

கலைவாணர் இல்லம் :

அதாவது அவரது வீடு நாகர்கோவில் இருக்கிறது. இது மாநகராட்சிக்கு 25வது வார்டுக்கு உட்பட்ட ஒழுகினசேரியில் இருக்கிறது. இந்த பகுதி மேயரும், கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் அவர்கள் சமீபத்தில் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஆராட்டு ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்த போது கலைவாணர் வீட்டையும் ஆய்வு செய்து இருக்கிறார்கள். இதனை அடுத்து கலைவாணர் குடும்பத்தினரையும் நலம் விசாரித்து இருக்கிறார்கள்.

Advertisement

மேயர் அறிவித்தது :

தற்போது கலைவாணர் வீடு மற்றும் அவர்களின் குடும்பத்தின் நிலையை அறிந்து தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்கள். அதுமட்டுமில்லாமல் கலைவாணர் வாழ்ந்த வீட்டை தன்னுடைய சொந்த செலவில் சீரமைத்து, அவருடைய குடும்பத்திற்கு தேவையான உதவிகளையும் செய்ய இருப்பதாக மேயர் அறிவித்திருக்கிறார். தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement