கணவர் இறந்த சோகத்தில் இருந்து மீனாவை மீட்ட தோழிகள் – கவனத்தை ஈர்த்த ரம்பாவின் டீ -ஷர்ட் வாசகம்.

0
485
meena
- Advertisement -

கணவர் இறப்பிற்கு பின் தோழிகளை சந்தித்திருக்கும் மீனாவின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் மீனா. இவர் கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுலகில் நடித்து வருகிறார். அதன் பின் கதாநாயகியாக நடித்து வந்தார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதிலும், இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு,அஜித், உள்ளிட்ட பல பிரபலங்களுடன் பிசியாக நடித்து இருக்கிறார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்தில் மீனா நடித்திருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு மீனா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது.

- Advertisement -

மீனா குடும்பம்:

இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது மீனா பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கு இடையில் மீனா அவர்கள் வித்யாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் என்பவரை கொண்டார். இவருக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறார். நைனிகா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூரை சேர்ந்தவர். இப்படி ஒரு நிலையில் வித்யாசாகருக்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை இருந்திருக்கிறது.

மீனா கணவருக்கு ஏற்பட்ட பிரச்சனை:

இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதற்கு காரணம் புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசித்த போது ஏற்பட்ட நோய் என்று கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், ஏற்கனவே இந்த பாதிப்பு இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மீனாவின் கணவருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. இதனால் ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்து சிகிச்சை அளித்து வந்தார்கள்.

-விளம்பரம்-

மீனாவின் கணவர் மரணம்:

இருந்தும் சிகிச்சை பலன் இல்லாமல் சமீபத்தில் தான் வித்யாசாகர் இறந்து விட்டார். வித்யாசாகரின் இறப்பிற்கு ரஜினி, கலா மாஸ்டர், சுந்தர் சி, ரம்பா, குஷ்பூ போன்ற பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். மேலும், தன்னுடைய கணவர் இறந்த பிறகு மீனா சமூக வலைத்தளம் பக்கமே அதிகம் வராமல் இருந்தார். இந்த நிலையில் மீனாவின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மீனாவின் லேட்டஸ்ட் புகைப்படம்:

அதாவது, சமீபத்தில் மீனா அவர்கள் தன்னுடைய சக தோழிகளை சந்திக்கும் போது எடுத்த புகைப்படம். அந்த புகைப்படத்தில் மீனாவுடன் ரம்பா, சங்கவி, சங்கீதா ஆகியோர் இருக்கின்றனர். கணவர் இறப்பில் இருந்து மீனா கொஞ்சம் மீண்டு வந்து இருக்கிறார் என்பது அந்த புகைப்படத்தை பார்க்கும் போது நன்றாக தெரிகிறது. அது மட்டும் இல்லாமல் ரம்பா அணிந்திருந்த டீசர்ட்டில் be bright, be happy, be you.. என்று போடப்பட்டு இருக்கிறது.

Advertisement