உடல் எடை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ள மீனா. லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

0
4006
meena
- Advertisement -

தமிழ் சினிமாவில் 40 வயதை கடந்தும் தற்போதும் இளமையாக இருக்கும் பல்வேறு நடிகைகள் இருக்கிறார்கள் அந்த வகையில் பிரபல நடிகையான மீனாவும் ஒருவர்தான். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் நடிகை மீனா. சூப்பர் ஸ்டார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா அதன் பின்னர் அவர் படத்திலேயே கதாநாயகியாகி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் மீனா.

-விளம்பரம்-

ரஜினி, கமல் மட்டுமல்லாது அதற்கு பின் வந்த அஜித், பிரசாந்த் என்று பல்வேறு நடிகைகளுடன் நடித்து விட்டார். மேலும், விஜய்யுடன் ‘ஷாஜஹான்’ படத்தில் விஜய்யுடன் குத்தாட்டமும் போட்டுள்ளார் மீனா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் மீனா ரஜினியின் அண்ணாத்த வருகிறார்.

- Advertisement -

சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா நடிக்கிறார்கள் என தகவல் வெளியானது. நடிகர் ரஜினியுடன் இந்த படத்தில் குஷ்பு, மீனா, ரஜினியுடன் க்ரீத்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு வெற்றி அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டராக பணியாற்றி உள்ளார். டி.இமான் அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார்.

Image result for மீனா ரஜினி 168

-விளம்பரம்-

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம், அந்த அளவிற்கு மிகவும் ஸ்லிம்மாக அனைவரையும் ஆச்சிரிய படுத்தும் விதத்தில் தெரிகிறார் நடிகை மீனா. அண்ணாத்த படத்தில் நடிகை மீனா ரஜினியின் மனைவியாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. மேலும், நடிகை மீனா இந்த படத்தில் கிராமத்து லுக்கில் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. அதனை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் நடிகை மீனா, படப்பிடிப்பு தளத்தில் கிராமத்து லுக்கில் இருக்கும் புகைப்படம் கூட வெளியாகி இருந்தது.

Advertisement