உனக்கு என்னடி ரைட்ஸ் இருக்கு என்ன அடிக்க – மீனாட்சி பொண்ணுங்க சீரியல் ஷூட்டிங்கில் பொங்கிய சசிலயா.

0
234
- Advertisement -

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் செட்டில் நடிகைகள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் மீனாட்சி பொண்ணுங்க. ஆண் துணை இல்லாமல் தன்னுடைய மூன்று பெண்களையும் கௌரவமாக சம்பாதித்து வளர்த்து வருபவர் தான் மீனாட்சி.

-விளம்பரம்-

இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால், இடையில் சீரியலில் இருந்து பல பேர் மாற்றம் செய்து விட்டார்கள். மேலும், இந்த சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக ரங்கநாயகி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் சசி லயா. சோசியல் மீடியா முழுவதும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லயா. இவர் சமூக ஆர்வலர், தன்னம்பிக்கை பேச்சாளர், நடிகை என பன்முகம் கொண்டவர்.

- Advertisement -

லயா குறித்த தகவல்:

விஜேவாகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் டிக் டாக்கில் இலங்கைத் தமிழில் தத்துவங்கள், அறிவுரைகள் எல்லாம் சொல்லி வீடியோக்கள் போட்டிருந்தார். இதனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி ரசிகர் உருவாகி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இவருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த பகாசூரன் படத்தில் இவர் நடித்திருந்தார். இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருந்தது.

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் :

அதனை அடுத்தும் இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து இருக்கிறார். தற்போது இவர் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகைகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, இந்த சீரியல் உடைய ஷூட்டிங் ஸ்பாட்டில் சோபா ஒன்றில் நடிகைகள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

சூட்டிங்கில் நடந்த சண்டை:

அப்போது சீனியர் நடிகையான ஆர்த்தி உட்கார இடம் கேட்டு இருக்கிறார். அதற்கு சசிலயா தள்ளி உட்கார்ந்து இருக்கிறார். சீனியர் வரும்போது ஜூனியர் எழுந்து நின்று எழ வேண்டும். அதற்கான மரியாதை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் ஆர்த்தி சொன்னவுடன் இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. உடனே ஆர்த்தி, லயாவை அடிக்கிருக்கிறார். இதனால் அங்கிருந்த மற்ற நடிகைகள் அவர்களை விலக்கி இருக்கிறார்கள்.

சண்டை குறித்த விவகாரம்:

மேலும், இது தொடர்பாக லயா சீரியல் இயக்குனரிடம் புகார் அளித்திருக்கிறார். அதில் அவர், எனக்கு ஜூனியர் நடிகை என்று மரியாதை கொடுக்க வில்லை, ஒதுக்கி வைக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். பின் சீரியல் இயக்குனர் இரு தரப்பிலும் பேசி பிரச்சினையை முடித்து வைத்திருக்கிறார். இது தொடர்பாக லயா பதிவு போட்டு இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவை சூட்டிங்கில் இருந்த நபர் தான் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக சீரியல் தரப்பிலிருந்து எந்த புகாரும் காவல் நிலையத்தில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

Advertisement