நாட்டாமை டாஸ்கின் போது இப்படி எல்லாம் நடந்தார் சேரன்.! மீரா அளித்த முதல் பேட்டி.!

By Rajkumar · 30/7/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறியபின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் கண்டன்ட் கொடுத்தது மீரா மட்டும் தான். ஆரம்பித்த சில நாட்களிலேயே மற்ற போட்டியாளர்களின் வெறுப்பை சம்பாதித்தார் மீரா. இருப்பினும் அப்போது மீராவிற்கு கொஞ்சம் மக்கள் ஆதரவு இருந்தது.

ஆனால், நாட்கள் செல்ல செல்ல அம்மணி தன் தலையிலேயே மண்ணை வாரி போட துவங்கிவிட்டார். அதிலும் சேரன் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக இவர் ஆடிய நாடகம் தான் இவருக்கு வினையாக அமைந்தது. நிகழ்ச்சி ஆரம்பத்தில் மீராவிற்கு சேரன் தான் ஆதரவாக பேசி வந்தார்.

இதையும் பாருங்க : மங்காத்தா கவின், 96 லாஸ்லியா.! அடேய் எல்ல மீறி போறீங்க டா.! 

ஆனால், ஒரு கட்டத்தில் இருவரும் முட்டிக்கொண்டு விட்டது. அதிலும் குறும்படம் போட்டுக்காண்பித்தும் தனது தவறை மீரா உணராமல் கடவுளுக்கு தெரியும் என்று ரஜினி வசனத்தை எல்லாம் பேசினார். இந்த நிலையில் பிரபல இந்து நாளிதழுக்கு மீரா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் சேரன் பற்றி பேசியுள்ள மீரா

''எனக்கு நடந்ததை தான் என்னால் கூற முடியும் சேரன் என்னிடம் நாட்டாமை டாஸ்க்கின் போது பலமுறை என் நிறத்தை வைத்து இழிவு படுத்தி உள்ளார். ஆனால், அதை நான் பெரிதுபடுத்தவில்லை ஒரு பிரபலமான இயக்குனரை இழிவுபடுத்த வேண்டாம் என்று நான் எண்ணினேன். ஆனால், அவர் என் மீது பல முறை கத்தியுள்ளார். ஒருகட்டத்தில் அவருடைய கோபம் வன்முறையாக மாறியது.

அவர் ஒரு கட்டத்தில் ஆணாதிக்கத்தின் எல்லைக்கே சென்று விட்டார். இதுவே சாண்டி அல்லது வேறு யாராவது அந்த இடத்தில் இருந்திருந்தால் நான் கண்டிப்பாக அறைந்தே இருப்பேன். ஒரு பெண்ணுக்குத் தெரியும் ஒருவர் தொடும் போது அது தற்செயலாக நடந்ததா, இல்லை கோபத்தில் செய்கிறாரா என்பது. ஆனால், அவர் தனது மகளின் பெயரை சொல்லி கண்ணீர் வடித்து நான் கூறிய குற்றச்சாட்டை திசை திருப்பி விட்டார்.

நான் எங்கேயும் அவர் என்னிடம் தவறாக நடந்ததாகவோ, அத்து மீறியதாகவோ குறிப்பிடவில்லை அவர் என்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் என்பதுதான் நான் கூறினேன். ஆனால், அவரோ என்னை தொட்டதற்காகத்தான் அவர் மீது நான் குற்றம் சாட்டுவதாக நினைத்துவிட்டார். ஆனால், என்னிடம் அவர் பல முறை மிகவும் கொடூரமாக நடந்துள்ளார். எல்லாம் கடவுளுக்கு தெரியும்''

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full