இவர் தான் மீரா ஜாஸ்மினின் அண்ணனா ? முதன் முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்.

0
572
meerajasmine
- Advertisement -

நடிகை மீரா ஜாஸ்மின் தனது சகோதரன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள். மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு பல்வேறு நடிகைகள் வந்து கொடி கட்டி பறந்து இருக்கிறார்கள். நயன்தாரா துவங்கி சாய் பல்லவி வரை அனைவரும் மலையாள சினிமாவில் இருந்து வந்தவர்கள். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். மீரா ஜாஸ்மின் கேரளாவில் 1982 ஆம் ஆண்டு திருவல்லாவில் பிறந்தவர். இவருடைய முழு பெயர் ஜாஸ்மின் மேரி ஜோசப். நடிகை மீரா ஜாஸ்மின் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது தனது ஊரான திருவல்லாவில் மலையாள படத்தின் சூட்டிங் நடந்த வந்தது.

-விளம்பரம்-

அதனை பார்க்க மீராவும் அவரது நண்பர்களும் வந்தார்கள். அங்கு இருந்த இயக்குனர் மீரா ஜாஸ்மினின் நடவடிக்கைகளை பார்த்து தன்னுடைய அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறாயா என கேட்டுள்ளார். பள்ளியில் கூட ஸ்டேஜில் ஏறாத மீரா ஜாஸ்மினுக்கு அந்த வாய்ப்பு அதிர்ச்சியாக இருந்தது. சரி என்று சொல்லி 2001 ஆம் ஆண்டு வெளியான சூத்ரதாரன் என்ற படத்தில் நடித்து சினிமா துறைக்கு அறிமுகமானார் மீரா. பின் சாக்லேட் பாய் மாதவன் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தான் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

- Advertisement -

மீரா ஜாஸ்மின் நடித்த படங்கள்:

இந்த படத்தின் மூலம் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டார் மீரா ஜாஸ்மின். அதன் பின்னர் சினிமா துறையில் மீரா ஜாஸ்மினுக்கு தொட்டதெல்லாம் பொன்னானது. புதிய கீதை, ஆஞ்சநேயா, மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, மெர்குரிப் பூக்கள், பரட்டை என்ற அழகுசுந்தரம் என பல படங்களில் நடித்தார். அதுமட்டுமல்லாம் தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் ஆகிய இரண்டு ஹீரோக்களுடன் நடித்த பெருமையும் இவருக்கு இருக்கிறது.

மீரா ஜாஸ்மின் திரை பயணம்:

இவர் இதுவரை தமிழ் மற்றும் மலையாளத்தில் 50க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் 2008ல் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான மெண்டலின் ராஜேஷ் என்பவரை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்துகொள்வதாக இருந்தது. ஆனால், கடந்த 2014 ஆம் ஆண்டு தனது 32 வயதில் மீரா ஜாஸ்மின் சாப்டவேர் இன்ஜினீயர் அனில் ஜான் டைட்டசை திருமண செய்துகொண்டு துபாயில் செட்டில் ஆகிவிட்டார். பின்னர் 2016 ஆம் ஆண்டு விவாகரத்தும் பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து நடித்து வந்த மீரா உடல் எடை கூடியதால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

-விளம்பரம்-

மீரா ஜாஸ்மின் குடும்ப வாழ்கை:

திருமணத்திற்கு பிறகு மீரா ஜாஸ்மின் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்தார். அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியாவில் கூட மீரா ஜாஸ்மின் தலை காட்டவே இல்லை. சில வருடங்களுக்கு முன் இவர் பருமனாக இருக்கும் புகைப்படம் மட்டும் ஒன்று வெளியாகி இருந்தது. பின் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு பிறகு தற்போது இவர் படு ஸ்லிம்மாக மாறி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்திருக்கிறார். மீண்டும் மீரா ஜாஸ்மின் திரை உலகில் களம் இறங்க இருக்கிறார். அதற்காகத்தான் இவர் தன் உடல் எடையை குறைத்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் சமீப காலமாகவே சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மீரா ஜாஸ்மின் தன்னுடைய சகோதரியின் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.

இன்ஸ்டாவில் சகோதரன் புகைப்படம்:

பதிவிட்டு அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய அதிர்ஷ்டமான சகோதரருக்கு இன்று பிறந்தநாள். என்றும் எப்போதும் உங்களது உடல் நலம் மற்றும் அமைதிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், அந்த புகைப்படத்தில் அவரது அண்ணனை பார்த்த பலர் அவருக்கு உடல் குறைபாடு இருப்பதை பார்த்து கவலையும் அடைந்துள்ளனர். இருப்பினும் மீரா ஜாஸ்மின் சகோதரர் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் இது உண்மையாலுமே உங்கள் சகோதரரா? என்று கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். இதற்கு மீரா ஜாஸ்மின் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

Advertisement