சாக்லேட் பாய் மாதவன் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மீரா ஜாஸ்மின். மீரா ஜாஸ்மின் கேரளாவின் 1982 ஆம் ஆண்டு திருவல்லாவில் பிறந்தவர். இவருடைய முழு பெயர் ஜாஸ்மின் மேரி ஜோசப்.
மீரா ஜாஸ்மிஸ் சிறு வயதில் இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என கனவுகண்டு வந்தவர். ஆனால், சினிமாவிற்குள் வந்தது அவருக்கே ஆச்சரியமாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார். பள்ளியில் கூட ஸ்டேஜில் ஏறாத மீரா ஜாஸ்மினுக்கு அந்த வாய்ப்பு அதிர்ச்சியாக இருந்தது.
சரி என்று சொல்லி, 2001 ஆம் ஆண்டு சூத்ரதாரன் என்ற படத்தில் நடித்தார். அதன் பின்னர் மீரா ஜாஸ்மினுக்கு தொட்டதெல்லாம் பொன்னானது. தமிழில் ரன், புதிய கீதை, ஆஞ்சநேயா, மற்றும் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, மெர்குரிப் பூக்கள், பரட்டை என்ற அழகுசுந்தரம், என பல படங்களில் நடித்தார்.
2008 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான மெண்டலின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்துகொள்வதாக இருந்தது. ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டு தனது 32 வயதில் துபாயை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் அனில் ஜான் டைட்டசை திருமண செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் மீரா. மேலும், இவருக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது.