உங்கள் தந்தை இருக்கும்போதே இதை சொல்லிவிடுங்கள் - தந்தை இறந்த சோகத்தில் ஆத்மீகா உருக்கம்.
சினிமா உலகை பொருத்தவரை சில அறிமுக நடிகைகள் தங்களது முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் மாபெரும் பிரபலத்தை அடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை ஆத்மிகா. இவர் பிரபல பாப் பாடகர் இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக அறிமுகமான ‘மீசையமுறுக்கு’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். இந்த படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற மாட்டிக்கிச்சே என்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது. இந்த படத்திற்கு பின்னர் அம்மணிக்கு வேறு எந்த படத்திலும் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் நடிகை ஆத்மீகா சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும், நடிகை ஆத்மீகாவின் தந்தை கடந்த மாதம் 26ஆம் தேதி மாரடைப்பால் இறந்தார்.
இந்நிலையில் நடிகை ஆத்மிகா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தந்தை புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமான கருத்து என்று கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, இதை வாசிப்பவர்கள் தயவு செய்து உங்களுடைய பெற்றோரை கட்டிப்பிடித்து உங்களுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்று சொல்லுங்கள். அது நீங்கள் எனக்கு சொல்லும் இரங்கலாக ஏற்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் பாருங்க : ஆம்பளைங்களை பார்த்து கூச்சம் இல்லாம கேள்வி கேக்குற நீ ரஜினி பத்தி பேசுற – பார்வதியை கழுவி ஊற்றும் ரஜினி ரசிகர்கள்.
பின் அவர் தந்தைக்கும் ஒரு உணர்ச்சிபூர்வமான கருத்தையும் கூறியுள்ளார். நீங்கள் என்னில் ஒரு பகுதியை எடுத்து விட்டீர்கள். ஆனால், நான் உங்களின் ஒரு பகுதியை எப்போதும் வைத்திருப்பேன். நீங்கள் என்னில் வாழ்கிறீர்கள். நான் உங்களை அதிகமாக நேசிக்கிறேன். எங்காவது ஒரு நாள் உங்களை நான் மீண்டும் சந்திப்பேன் என்று நம்பிக்கை இருக்கிறது என்று உருக்கமான பதிவு பதிவிட்டுள்ளார். இவர் இப்படி பதிவிட்ட கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CCIug27Bski/
இதனை பார்த்து பலரும் ஆத்மீகாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். தற்போது நடிகை ஆத்மீகா, வைபவின் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் கவலை வேண்டாம், யாமிருக்க பயமேன் போன்ற படங்களை இயக்கிய டீகே ஆர். கே நகர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா என 3 ஹீரோயின்கள் ஏற்கனவே கமிட் ஆகியுள்ளார்.