ஆம்பளைங்களை பார்த்து கூச்சம் இல்லாம கேள்வி கேக்குற நீ ரஜினி பத்தி பேசுற – பார்வதியை கழுவி ஊற்றும் ரஜினி ரசிகர்கள்.

0
24970
- Advertisement -

கடந்த சில நாடளுக்கு முன்னர் கோவில்பட்டியை அடுத்து உள்ள சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் இருவரின் மரணத்தால் தமிழகமே கொந்தளித்து போய் உள்ளது. . சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் (59), அவரது மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் (31) என்ற தந்தை மகன்கள் இருவரும் போலீசாரால் அடித்து பின்னர் இறந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காட்டுத் தீயை விட வேகமாக கொழுந்து விட்டு எரிகிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு நியாயம் கேட்டு நாடு முழுவதும் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், நடிகர், நடிகைகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் இந்த சம்பவம் நடந்து 12 கழித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும்,

இதையும் பாருங்க : 12 நாட்கள் கழித்து சாத்தான்குளம் சம்பவம் குறித்து ட்வீட் போட்ட ரஜினி – பங்கமாக கலாய்த்த தமிழ் பட இருக்குனர்.

- Advertisement -

காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது” என்று கூறி #சத்தியமா_விடவே_கூடாது என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டார்.ரஜினி சொன்ன #சத்தியமா_விடவே_கூடாது என்ற வார்த்தை தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. இந்த நிலையில் ரஜினி செய்த டீவீட்டை விமர்சித்து பிரபல விஜேவான பார்வதி ட்வீட் செய்துள்ளார்.

அதில், மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் ” சரி ஒகே… அப்போ அந்த ரெண்டு SI ?? அதையும் கொஞ்சம் தெளிவா குறிப்பிட்டு சொல்லலாமே.. யாருக்கு தண்டனை ? எதுக்கு இந்த மேலோட்டமான பேச்சு .. ?? என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

பார்வதியின் இந்த டீவீட்டை பார்த்த ரஜினியின் ரசிகர்கள் பார்வதியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து கொன்றதை// அப்டினு தெளிவாதான போட்ருக்கு இதக்கூட புரிஞ்சுக்க முடியலயா இல்ல 18+ கன்டென்ட்ல வீடியோ பண்றதால புரிஞ்சுக்குற திறன் இல்லாம போய்டுச்சா…???என்று ரசிகர் ஒருவர் கமன்ட் செய்துள்ளார்.

Advertisement