விஜய், அஜித்தை பார்த்தா இதான் கேட்பேன்.! பேட்ட நடிகை மேகா ஆகாஷ் பேட்டி.!

0
1474
Megha-Akash
- Advertisement -

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் வரவு மேகா ஆகாஷ். இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை ஆனால் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். சூப்பர் ஸ்டார் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பேட்ட’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

சென்னையை சேர்ந்த மேகா ஆகாசுக்கு 22 வயது தான் ஆகிறது. ‘மறு வார்த்தை பேசாதே’ என்னும் ஒரே வீடியோ சாங்கில் செம்ம ரீச் ஆகிவிட்டார். அந்த பாடலை தொடர்ந்து பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறி இருந்தார் மேகா ஆகாஷ்.

- Advertisement -

சமீபத்தில் எஸ் டி ஆர் நடிப்பில் வெளியான ‘வந்தா ராஜா வாதான் வருவேன்’ அதர்வா நடிப்பில் வெளியான ‘பூமராங்’ போன்ற படங்களிலும் நடித்திருந்தார். தற்போது கௌதம் மேனன் இயக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

Dhoni

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை மேகா ஆகாஷ், விஜய் அஜித் தோனி குறித்து பேசியுள்ளார். அதில் அவர்களை நேரில் பார்த்தால், விஜய்யிடம் டான்ஸ் சொல்லிக்கொடுங்கள் என்று கேப்பேன் என்று கூறியுள்ளார். மேலும், அஜித்தை கண்டால் எப்படி இவ்வளவு ஹாண்ட்ஸ்ஸம்மாக இருக்கீங்க என்று கேட்பேன் என்றும், இந்திய கிரிக்கெட் வீரர் தோனியை கண்டால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன் என்று கூறியுள்ளார் மேகா ஆகாஷ்.

-விளம்பரம்-
Advertisement