மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நடித்த நடிகையா இது ? இன்ஸ்ட்ராகிராம் புகைப்படத்தை கண்டு வாயை பிளந்த ரசிகர்கள்.

0
859
Mehandi-Circus
- Advertisement -

மெஹந்தி சர்க்கஸ் படத்தின் கதாநாயகியின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இயக்குனர் சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த படம் மெஹந்தி சர்க்கஸ். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் புதுமுக நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் கதாநாயகனாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

புது முக நடிகை ஸ்வேதா திரிபாதி கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் படத்தில் வேலராமமூர்த்தி, விக்னேஷ் காந்த், மாரிமுத்து உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தவர் நடிகை ஸ்வேதா திரிபாதி. இந்த படத்தின் மூலமே இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தார்.

- Advertisement -

நடிகை ஸ்வேதா திரிபாதி:

இந்நிலையில் இவரை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். நடிகை ஸ்வேதா திரிபாதி டெல்லியை சேர்ந்தவர். இவருடைய தந்தை இந்திய ஆட்சிப் பணியில் பணிபுரிகிறார். இவருடைய தாயார் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தொலைக்காட்சி தொடரின் மூலம் தான் மீடியாவிற்குள் நுழைந்தார். அதற்கு பின்பு இவர் தயாரிப்பு உதவியாளராகவும், உதவி இயக்குனராகவும் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கி இருந்தார்.

ஸ்வேதா திரிபாதி திரைப்பயணம்:

பின் பாலிவுட் படத்தின் மூலம் நடிகையாக சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். இவர் 2011 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான திரிஷனா என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். இதனை தொடர்ந்து இவர் சுஜாதா, மசான் போன்ற பல திரைப்படங்களில் நடித்து இருந்தார். இதன் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அதிகரித்தது.

-விளம்பரம்-

ஸ்வேதா திரிபாதி நடிக்கும் படங்கள்:

தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இவர் சினிமாவில் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் இதுவரை பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் பிரபலம் கிடைக்கவில்லை. ஆனால், தமிழில் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் இவருக்கென்று ஒரு தனி பிரபலம் கிடைத்தது. இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது.

ஸ்வேதா திரிபாதி லேட்டஸ்ட் புகைப்படம்:

அதற்குப் பின்பு இவருக்கு பெரிதாக தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது இவர் வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவருடைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் நடிகையாக இது! என்று ஆச்சரியத்தில் வியந்து புகைப்படங்களை வைரலாக்கியும் லைக்ஸ்குகளை குவித்தும் வருகிறார்கள்.

Advertisement