அறிமுக இயக்குனர் லெனின் பாரதியின் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த திரைப்படம் தான் மேற்கு தொடர்ச்சி மலை. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் ஆண்டனி, காயத்திரி கிருஷ்ணா, அபு வலையங்குளம் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை நடிகர் விஜய் சேதுபதி தயாரித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நிறைய புதுமுக நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருந்தார். இது ஒரு வழக்கமான சினிமா இல்லை. ஒரு வாழ்வியல் பதிவு.

தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலிருந்து மலைக்கு மேல் உள்ள கிராமங்களுக்கு பொருட்களை சுமந்து செல்லும் தொழிலாளி ரங்கசாமிதான் (ஆண்டனி) தான் படத்தின் கதாநாயகன். மலை அடிவாரத்தில் இருந்து தினமும் பொருட்களை சுமந்து சென்று கிராமங்களில் உள்ள மக்களிடம் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து ஏலக்காய் மூட்டைகளை சுமந்து வந்து உரியவர்களிடம் ஒப்படைப்பது தான் இவருடைய வேலை.

இதையும் பாருங்க : தசாவதாரம் அவதார் சிங்கை போல பிரபல பஞ்சாப் சிங்கருக்கு நேர்ந்த சோகம் – துப்பாக்கியால் சுட்டு கொலை (பின்னணி என்ன ? )

Advertisement

மேற்கு தொடர்ச்சி மலை படம்:

இவரின் வாழ்க்கை வழியே அந்த மக்களின் வாழ்வியலை பதிவு செய்கிறது படம். படத்தில் ரங்கசாமிக்கு சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்பது தான் வாழ்நாள் கனவு. அதற்காக சிறுக சிறுக பணம் சேர்த்து வைக்கிறார். இதனிடைய அவரது மாமன் மகள் ஈஸ்வரியை (‘ஜோக்கர்’ காயத்திரி) திருமணம் செய்து கொள்கிறார். பின் ஒரு மகனும் பிறந்துவிட்டான். வாழ்க்கை இப்படியே நகர்ந்து கொண்டிருக்க மலையடிவாரத்தில் ஒரு நிலம் விலைக்கு வருகிறது.

படத்தின் கதை:

அதை வாங்க கணவனும் மனைவியும் முயற்சி கொள்ளும் போது எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. ரங்கசாமி நிலம் வாங்கி விவசாயம் செய்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்தில் மலைவாழ் மக்களின் வாழ்வியலை சினிமாத்தனம் இல்லாமல் நேர்மையாக இயல்பாக காண்பித்திருக்கிறார்கள். கார்ப்பரேட் வாழ்க்கை பற்றி அறியாத அந்த எளிய மனிதர்களுக்கு பின்னால் நடக்கும் அரசியலைப் பற்றி பேசும் படமாகவும் இருக்கிறது.

Advertisement

காயத்திரியின் திரைப்பயணம்:

இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று யோசித்ததற்காகவே இயக்குனர் லெனின் பாரதிக்கும், படத்தைதயாரித்த விஜய் சேதுபதிக்கும் பெரிய பாராட்டு கொடுக்கப்பட்டது. உலகமயமாக்கலின் தாக்கத்தால் கிராமங்களை விட்டு விரட்டப்படும் மக்கள் நிலமற்றவர்களாக எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் படத்தில் சொல்லப்படுகிறது. இந்த படம் பல்வேறு பிரிவுகளில் விருதினை பெற்று இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக ஜோக்கர் பட நடிகை காயத்ரி அவர்கள் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisement

காயத்திரியின் லேட்டஸ்ட் புகைப்படம்:

இதற்கு முன் இவர் மலையாளத்தில் ஒரு சில படங்களிலும் நடித்து இருக்கிறார். இவருக்கு நடிப்பை விட நடனத்தில் அதிக ஆர்வம். ஆகையால், பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தற்போது இவருடைய புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த புகைப்படத்தில் அவர் படு மாடர்னாக இருக்கிறார். அதை பார்த்து பலரும் வியந்து போய் மலைவாழ் பெண்ணா இவர்! என்று கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

Advertisement