மெர்சல் படத்தின் 200 கோடி வசூல் பொய் – பிரபல நடிகர் தகவல்

0
2417

மெர்சல் படம் தீபாவளிகு வெளியாக கல்ல கட்டியதும், எப்போதும் கீரியும் பாம்புமாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் என இருவரும் சேர்ந்து ஆதரவு தெரிவித்த படம் இது. அதற்கு தமிழக பாரதீய ஜனதா கட்சிக்குதான் நன்றி கூற வேண்டும்.

mersalதற்போது வசூல் பற்றி பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றனர். சென்னை பாக்ஸ் ஆபீசில் இன்று கபாலி திரைப்படத்தின் வசூலை முறியடித்துவிடும் என சினிமா விமர்சகர்களும் பதிவிட்டு வந்தனர்.

தற்போது 200 கோடிகள் வசூல் செய்தது மெர்சல் படம் என ‘இந்தியா டுடே; போன்ற தேசிய ஊடகங்களின் தொலைகாட்சிகளிலும் விவாதங்களில் பேசப்பட்டது.

radharaviதற்போது முன்னால் நடிகர் சங்க செயளாலர் நடிகர் ராதாரவி மெர்சல் படத்தின் வசூலைப் பற்றி சர்ச்சைகுறிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். “மெர்சல் படம் விரைவில் 200 கோடியைத் தொடும் என தயாரிப்பாளர் கூறுவது படத்தின் ப்ரமோசனுக்காக கூட இருக்கலாம்”, எனக் கூறியுள்ளார்.

மேலும், அவர் கொடுத்த அந்த பேட்டியில் அஜித்தை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார். மற்றவர்களுக்கு உதவுவதில் அவர் தான் நெ.1 இதுவரை கிட்டத்தட்ட, 5000 பேருக்கு மேல் கண் ஆபரேசனுக்கு அஜித் உதவிசெய்துள்ளாதாக கூறியுள்ளார் ராதாரவி.