மெர்சல் பட குட்டி விஜய்யா இது ? பாத்தா நம்பமாட்டீங்க – புகைப்படம் உள்ளே !

0
10325
mersal aksath

கடந்தாண்டில் இயக்குனர் அட்லீ இயக்கி இளையதளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து பட்டையை கிளப்பிய படம் மெர்சல்.படம் மட்டும் மாபெரும் ஹிட் அடித்தது மட்டுமில்லாமல் படம் வெளியாவதற்கு முன்னாலே அப்படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது.

mersal

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஆளப்போறான் தமிழன் பாடல் வெளியானதும் அரசியலுக்கு விஜய் வருவாரா என்கிற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும் பாடல் வரிகள் தமிழகம் முழுதும் ஒலிக்கத்தொடங்கின.பல முன்னனி நடிகர்கள் இந்தப்படத்தில் பல கேரக்டர்களில் நடித்திருந்தாலும் அப்பா விஜய்க்கு மகன் கேரக்டரில் நடித்து அசத்திய குட்டி விஜய் “அஷாந்த்”தை யாரும் அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது.

தனது அழகான சிர்ப்போடு கூடிய திறமையான நடிப்பால் இளம்வயதிலேயே தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக்கொண்ட அஷாந்த் மெர்சல் படம் வெளியானவுடனே வளர்ந்தவுடன் விஜய் போல இருக்க ஆசை என தனது ஆசையை தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

படத்தில் அப்பாவியாக கிராமப்புற சிறுவனாக வலம்வந்த அஷாந்த் தற்போது அந்நியன் பட ரெமோ ரேஞ்சில் ஆளே மாறிவிட்டுள்ளார். ஸ்டைலான கட்டிங் மற்றும் அசத்தலான டிரெஸ்ஸிங் என இளம் மாடல் போல காட்சியளிக்கும் அவரது படம் ஒன்று தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

aksanth

மெர்சல் படத்தில் நடித்த அந்த பையனா இந்த பையன் என அனைவரும் கேள்விக்குறியுடன் பார்த்துவருகின்றனர்.தற்போது பலரும் இந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement