இணையத்தில் தீயாய் பரவும் மெர்சல் படத்தின் கதை..!

0
2265
Mersal

விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளிவர இருக்கின்றது.தற்போது இதுதான் மெர்சல் திரைப்படத்தின் கதை ஒரு கதை உலாவருகின்றது.
Vijayவிஜய் ஒரு கிராமத்து தலைவராகவும் அவர் மனைவியாக நித்யிமேனனும் நடித்துள்ளதாகவும் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறப்பகின்றார்களாம்.ஆனால், குழந்தை பிறந்ததும் ஒரு குழந்தையை திருடிவிடுகிறார்கள். விஜய்யும் நித்யா மேனனும் ஒரு குழந்தைதான் பிறந்துள்ளது என நினைத்து அந்த குழந்தைக்கு மாறன் என்ற பெயர் சூட்டி வளர்த்து வருகிறார்கள்.

கிராமத்தில் நடக்கும் அக்ரமங்களை தட்டி கேட்கும் தலைவனாக அப்பா விஜய் மற்றும் நித்யா மேனனை ஊழல் செய்யும் மாவட்ட ஆட்சியாளார் கதாபாத்திரத்தில் நடித்துள்ள எஸ்.ஜே.சூரியா தீர்த்துகட்டிவிடுகிறார். ஆனால், விஜய்யின் மகன் மாறன் தப்பித்துவிடுகிறார். திருடப்பட்ட குழந்தையான இன்னொரு விஜய் மெர்சல் அரசனாக வடிவேலுவிடம் வளர்கிறார்.
Vijayமாறன் மருத்துவம், அரசியல் என இரண்டிலும் புகுந்து விளையாடி வருகிறார். ஒரு கட்டத்தில், வடிவேலுவிடம் வளரும் மெர்சல் அரசனுக்கு உண்மை தெரிந்து தன் தந்தையை கொன்றவர்களை தான் கற்றுகொண்ட மேஜிக் வித்தை மூல கச்சிதமாக காலி செய்துவிடுகிறார். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த பழி அனைத்தும் அண்ணன் மருத்துவர் மாறன் மீது விழுந்துவிடுகிறது.

இதையும் படிங்க: மெர்சல் படத்தின் முதல் காட்சிக்கு மட்டும் 50 லட்சமா.!

தன் உடன்பிறந்த அண்ணனை தான் நாம் பிரச்சனயில் சிக்கவைத்து விட்டோம் என தாமதமாக தான் புரிந்துகொள்கிறார் விஜய். பிறகு, எப்படி இருவரும் எந்த பிரச்னையும் இல்லாமல் தங்கள் மீது உள்ள நியாயத்தை கூறி தப்பிகிறார்கள் என்பது தான் க்ளைமாக்ஸ்.
SJ Surya இதில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து கலக்கியுள்ளார் அவர் விஜய்க்கு இணையான ஒரு வில்லன் கேரக்டரில் நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த கதை உண்மையோ இல்லையோ ஆனா கதை நல்லாருக்குல்ல.