ஷாக்கிங் செய்தி : 90ஸ் ரசிகர்களின் பேவரைட் சீரியலான மெட்டி ஒலி சீரியல் நடிகை திடீர் மரணம்.

0
2376
mettioli
- Advertisement -

90ஸ்ஸின் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘மெட்டி ஒலி’ சீரியலில் நடித்த முக்கிய நடிகை காலமாகி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பார்த்து ரசித்து மகிழ்ந்த சீரியல் என்றால் அது மெட்டி ஒலி தான். அதிலும் ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது. 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் தான் ஒளிபரப்பப்பட்டது.

-விளம்பரம்-

இந்த சீரியலை திருமுருகன் அவர்கள் இயக்கினார். இந்த சீரியலில் டெல்லி குமார், காவேரி, காயத்திரி, வனஜா, உமா, ரேகா, சேத்தன், நீலிமா ராணி,போஸ் வெங்கட் மற்றும் திருமுருகன் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளார். ஆண்டுகள் பல கடந்தாலும் தற்போது வரை மக்கள் மெட்டி ஒலி சீரியலை பற்றி பேசிக் கொண்டு தான் உள்ளார்கள்.

- Advertisement -

மெட்டி ஒலி’ சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்தவர், உமா மகேஸ்வரி. ‘ஒரு கதையின் கதை’, ‘மஞ்சள் மகிமை’ போன்ற சீரியல்களிலும், ‘ஈ பார்கவி நிலையம்’ என்கிற மலையாளப் படத்தின் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். 13 வருடங்கள் மீடியாவில் பயணித்தவரை, திருமணத்துக்குப் பின்னர் சீரியலில் பார்க்க முடியவில்லை.

May be an image of 4 people and people smiling

இறுதியாக விஜய் டி.வி-யின் ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இப்படி ஒரு நிலையில் இவர் இன்று காலமாகி இருக்கிறார். காட்டுப்பாக்கத்தில் வசித்து வந்த விஜி கடந்த சில காலமாகமே உடல் நலக் குறைவால் பாதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இன்று காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 40.

-விளம்பரம்-
Advertisement