அசுரன் படத்தில் ஜானி சின்ஸ் மற்றும் மியா.! கூகிளில் எழுந்த சர்ச்சை.!

0
620
Asuran

வடசென்னை படத்திற்குப் பிறகு வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி மீண்டும் இணையும் படம் அசுரன். இப்படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருந்த மஞ்சு, நடிகர் திலீப்பைக் காதல் திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர்.

Image result for Asuran

வட சென்னை ஆடியோ விழாவில் பேசிய தனுஷ், வடசென்னையை மூன்று பாகமாக எடுக்க உள்ளோம். ஆனால் அதற்கு முன்னதாக நானும் வெற்றிமாறனும் இணைந்து வேறு ஒரு படம் எடுக்க இருக்கிறோம் என்று தெரிவித்து இருந்தார். பிறகு அசுரன்; என்ற தலைப்பையும் தனுஷ் வெளியிட்டார்.

அதன்படி அசுரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் துவங்கியது. இதனையடுத்து இரண்டு படத்தின் இரண்டு போஸ்டர்களும் வெளியாகின. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் துவங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல ஆபாச பட நடிகர்களான ஜானி சின்ஸ் மற்றும் மியா காலிபாவும் நடிப்பதாக கூகுளின் விக்கிபிடியாவில் காண்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் ஷாக்கடைந்துள்ளர்.