மெட்ராஸ் சென்ட்ரல் போலவே மைக் செட் டீமும் பிரிந்து விட்டதா..?

0
4947
mic-set-sriram
- Advertisement -

சினிமா, சின்னத்திரைபோல யூடியூப்பிலும் ஒரு தனி ராஜ்ஜியமே நடக்கிறது. கருத்து பேசுவதற்கு சில சேனல்கள், காமெடி பண்ணுவதற்கு சில சேனல்கள், ப்ராங் வீடியோ பண்ணுவதற்கு சில சேனல்கள் எனப் பல சேனல்கள் இளைஞர்கள் மத்தியில் ஃபேமஸாக இருக்கின்றன.

-விளம்பரம்-

micset

- Advertisement -

30, 40 நபர்கள் எனப் பெரிய அளவில் இயங்கும் சேனல்களுக்கு மத்தியில் சில நபர்களை மட்டும் வைத்துக்கொண்டு சக்ஸஸ்ஃபுல்லாக இயங்கி வந்த “மைக் செட்”சேனலில், ஏதோ ஒரு விரிசல் ஏற்பட்டிருக்கிறது எனத் தகவல்கள் வருகின்றன.

இதுகுறித்து ’மைக்செட்’ சேனல் ஸ்ரீராமிடம் பேசியுள்ள போது, எங்க டீமுக்குள்ள சண்டையா; அதெல்லாம் இல்லை ப்ரோ. மைக்செட்ல போடுற சோதனைகள் வீடியோ எல்லாம் நல்லா ஹிட்டாகுது. ஆனால், ரீச் எல்லாருக்கும் கிடைக்கிறது இல்லை. அதனால இன்னொரு சேனலை ஆரம்பிச்சு, அதை டெவலப் பண்ணலாம்னு நாங்க எல்லாரும் சேர்ந்து முடிவு எடுத்தோம்.

-விளம்பரம்-

மைக் செட் ஸ்ரீராம்:

mic set sriram

புது சேனலில் நீங்க எல்லோரும் வீடியோ பண்ணுங்க. நான் மைக்செட்ல பண்றேன்’னு நான் சொன்னதும், எல்லாரும் ஓகே சொல்லிட்டாங்க. ரெண்டு சேனலுக்கும் எல்லாரும் சேர்ந்துதான் ஸ்கிரிப்ட் எழுதுறோம். நிறைய பேர் கமென்ட்ல, ’உங்களுக்குள்ள சண்டையா’னுதான் கேட்குறாங்க. அதெல்லாம் இல்லை பாஸ்; நாங்க ஜாலியாகத்தான் வேலை பார்த்துட்டு இருக்கோம்’’ என்றார்.

நன்றி விகடன்!!!

Advertisement