தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற நடிகராக கொடிகட்டி பறந்தவர் மோகன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருந்தது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ஹரா. இந்த படத்தை இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தில் அனுமோல், சாருகாசன், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் ராம் என்ற கதாபாத்திரத்தில் ஜாலியான அப்பாவாக மோகன் நடித்திருக்கிறார். இவருடைய மகள் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். திடீரென்று அவருடைய மகள் தற்கொலை செய்து இருக்கிறார். இவருடைய இறப்பிற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. இதை கண்டுபிடிக்க மோகன் தன்னுடைய பெயரை இஸ்லாமிய பெயராக மாற்றிக் கொள்கிறார். பின் தன்னுடைய மகள் இறப்புக்கு காரணமானவர்களை தேடுகிறான்.

Advertisement

இறுதியில் அவர் தன் மகளை கொன்றவர்களை கண்டுபிடித்தாரா மோகன்? இஸ்லாமிய பெயரை ஏன் வைத்தார்? இதற்கெல்லாம் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதி கதை. நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகனை திரையில் பார்ப்பது ரசிகர்களுக்கு உற்சாகம். ஆனால், எதிர்பார்ப்பை தான் பூர்த்தி செய்ய முடியவில்லை. தான் இறந்துவிட்டது போல் உலகை நம்பி வேறொரு பெயரில் மோகன் தன் மகளை கொன்றவரை கண்டுபிடிக்க சுற்றிக் கொண்டிருக்கிறார்.

பெயர் மாற்றத்தை தவிர மற்றபடி அவர் எந்த ஒரு அங்க அடையாளத்தையும் மாற்றவில்லை. அதனால் பார்த்தாலே எளிதாக கண்டுபிடித்து விடலாம். இப்படி படம் முழுக்க நிறைய லாஜிக் குறைபாடுகள் இருக்கிறது. நேராக தொட வேண்டிய மூக்கை தலையை சுற்றி தொட வைத்திருக்கிறார் இயக்குனர். எந்த ஒரு ஆக்சன் திரில்லர் பாணியில் இல்லாமல் கதை பொறுமையாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

Advertisement

காமெடிகளும் கதைக்களமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. அதேபோல் வசனமும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. மோகனின் மனைவியாக அனுமோல், வில்லனாக சுரேஷ் மேனன் நடித்திருக்கிறார். இவர்களை அடுத்து படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், வனிதா விஜயகுமார், மைம் கோபி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

Advertisement

பல வருடங்கள் கடந்தாலும் மோகன் தன்னுடைய எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார். சமுதாயத்திற்கு ஒரு மெசேஜ் கொடுக்க இயக்குனர் முயற்சித்திருக்கிறார். ஆனால், அதை கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் கவனத்தை செலுத்தி இருந்தால் நன்றாக இருக்கும். சில காட்சிகள் செயற்கைத்தனமாக இருக்கிறது. கிளைமாக்ஸில் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கிறது. அதுதான் படத்திற்கு ஆறுதல் என்றே சொல்லலாம். மொத்தத்தில் மோகனின் ஹரா படம் ரொம்ப ரொம்ப சுமார்.

நிறை:

மோகனின் நடிப்பு

பின்னணி இசை, ஒளிப்பதிவு ஓகே

கிளைமாக்ஸில் ஒரு சிறிய ட்விஸ்ட்

மத்தபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக எந்த ஒரு சுவாரசியமும், அழுத்தமும் இல்லை

குறை:

நடிகர்கள் தேர்வில் இயக்குனர் கவனம் செலுத்தி இருக்கலாம்

கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்திலும் இன்னும் நிறைய கவனம் செலுத்தி இருக்க வேண்டும்

பாடல்கள் பெரிதாக கவரவில்லை

லாஜிக் குறைபாடுகள்

படம் ரொம்ப பொறுமையாக நகர்கிறது

ஒரு குறும்படம் போல் இருக்கிறது

மொத்தத்தில் ஹரா- அரோகரா

Advertisement