செல்ஃபீ கேட்ட பெண்ணை ரோட்டில் தண்டால் அடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட கார்த்தி பட நடிகர் – கழுவி ஊற்றிய ரசிகர்கள்.

0
8274
miland
- Advertisement -

தமிழில் கார்த்தி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘அலெக்ஸ் பாண்டியன் ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் மிலந்த் சோமன். அலேக்ஸ் பாண்டியன் படத்திற்கு பின்னர் லெக்ஸ் பாண்டியன், வித்தகன், பையா, பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் பரிட்சயமான நடிகர் இல்லை என்றாலும் ஹிந்தியில் இவர் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

நடிகர் மிலந்த் சோமனுக்கு தற்போது 54 வயது ஆகிறது. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு 2006-ல் பிரெஞ்சு நடிகையை மணந்து பின்னர் விவாகரத்து செய்து விட்டார். அதன் பின்னர் இரண்டு வருடங்களுக்கு முன்பு அங்கிதா கொன்வர் என்ற 26 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்துகொண்ட போது மகள் வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என்று விமர்சனங்கள் கூட எழுந்தன.

இதையும் பாருங்க : நீச்சல் உடையில் சம்யுக்தா நடத்தியுள்ள போட்டோ ஷூட் – மாடல் அழகியாச்சே. வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் ரோட்டில் பெண் ஒருவர் புடவை கட்டிக்கொண்டு தண்டால் எடுத்துக்கொண்டு இருந்தார். சமீபத்தில் மிலந்த் சோமனை ரோட்டில் சந்தித்த பெண் ரசிகை ஒருவர் அவருடன் செல்ஃபீ எடுக்க கேட்டுள்ளார். இதற்கு மலந்த், 10 தண்டால் எடுத்தால் நான் செல்ஃபீக்கு போஸ் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் அந்த பெண்ணும் இப்படி செய்துள்ளார்.

This image has an empty alt attribute; its file name is 1-110.jpg

இதுகுறித்து பதிவிட்ட அவர், எப்போதும் ஆரோக்யமாக இருங்கள், உங்களுக்கு பிடித்த விஷயத்தை எடுத்துக்கொள்ள என்னால் எது வேண்டுமானாலும் முடியும் என்று தயாராக இருங்கள் என்று பதிவிட்டு இருந்தார். சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலாக பரவ பலர் இதனை பார்த்து பாராட்டினாலும். பெரும் பாலானோர் இது மிகவும் தவறு. அவரை தண்டால் எடுக்க வைத்ததில் என்ன நன்மையை நீங்கள் கண்டு விடீர்கள் என்று மிலந்த் சோமனை கழுவி ஊற்றி வருகின்றனர். அந்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்

-விளம்பரம்-
Advertisement