அமைச்சர் ஜெயக்குமாரின் சர்ச்சைக்குரிய ஆடியோ..!உண்மையில் குழந்தை பிறந்ததா..!வெளியான அடுத்த ஆதாரம்

0
331
Minister-jayakumar

நேற்று இரவு முதல் தமிழகத்தை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது ஒரு ஆடியோ பதிவு. தமிழக அமைச்சர் ஜெயக்குமாரை மையமாக வைத்து சுழலும் அந்த ஆடியோ பதிவு, அ.தி.மு.கவுக்குள் பெரும்பரபரப்பைக் கிளப்பிவிட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான அந்த ஆடியோ பதிவில் பெண் ஒருவரிடம் கருக்கலைப்பு செய்யுமாறு அந்த ஆண் குரல் மிரட்டும் பாணியில் ஒலிக்கிறது. சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்த இந்த ஆடியோவில் பதிவாகியுள்ள குரல் அமைச்சர் ஜெயக்குமார் என்று செய்திகள் பரவ அவரை பதிவை விலகக்கோரி பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது அமைச்சர் ஜெயகுமாரால் பாதிக்கபட்ட அந்த பெண்ணுக்கு ஏற்கனவே குழந்தை பிறந்துள்ளது என்று ஒரு ஆதாரம் இருப்பதாக ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. சென்னை மாநகராட்சியில் இருந்து பெறப்பட்ட பிறப்பு சான்றிதழ் அக்டோபர் 21ம் தேதியன்று வெளியானது.

Jayakumar

அதில், ஆகஸ்டு 9-ம் தேதியன்று ஆண் குழந்தை பிறந்தது. அதன் அம்மா பெயர் – ஜே. சிந்து. அப்பா பெயர் – டி. ஜெயக்குமார். குழந்தை பிறந்த மருத்துவமனை பெயர் ஜெயம், பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை 21. குழந்தையின் பெற்றோர் முகவரி: ராயபுரம், பிராட்வேயில் உள்ள ஒரு ஃபிளாட். இந்தச் சான்றிதழ் அக்டோபர் 18-ம் தேதியன்று தரப்பட்டிருக்கிறது.