மிர்ச்சி விஜய்க்கு விரைவில் டும் டும் டும்.! காதலிச்சது இவங்கள தானா.!

0
2976
Mirchi-vijay
- Advertisement -

ரேடியோ மிரச்ச்சி FM சேனலில் ஆர்ஜேவாக இருந்து வந்து பலருக்கும் பரிட்சயமான குரல் இருக்கிறது அவரது குரல்! தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ஜோடி’ டான்ஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி விஜேவாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார் ஆர் ஜி விஜய்.

-விளம்பரம்-

தற்போது கணவராக தனது வாழ்க்கையை துவங்க உள்ளார் விஜய். ஆம், மிர்ச்சி விஜய்க்கு விரைவில் டும் டும் டும். மிர்ச்சி விஜய்.
இரண்டு வருடமாக காதலித்து வரும் மோனிகா என்கிற பெண்ணை கரம் பிடிக்கவுள்ளாராம். தனது காதல் குறித்து மிர்ச்சி விஜய் தெரிவிக்கையில்.

- Advertisement -

அவங்க என் ஃப்ரெண்ட்டோட ஃப்ரெண்ட். நான் கலந்துகிட்ட ஒரு நிகழ்ச்சியில் அவங்க எனக்கு அறிமுகமானாங்க. அதுக்கப்புறம் ஃப்ரெண்ட்ஸா பேச ஆரம்பிச்சோம். நல்ல நண்பர்களாக எங்களுடைய பயணம் தொடர்ந்துச்சு. இரண்டு வருஷமா காதலிக்கிறோம். இப்போ காதல், கல்யாணத்தை எட்டியிருக்கு! அவ்வளவு தாங்க!”  என்று கூறியுள்ளார்.

மேலும், தனது திருமண பிளான் குறித்து பேசிய விஜய்,
பெரிய அளவுக்கு எந்த பிளானும் இல்ல. ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ் மட்டும் தான் கல்யாணத்துக்கு கூப்டுறோம். ரொம்ப, ரொம்ப சிம்பிளா கல்யாணம் பண்றதுக்குத்தான் பிளான் பண்ணியிருக்கோம். இப்போ தான் கொஞ்ச, கொஞ்சமா மேரேஜ் வேலைகளைப் பண்ண ஆரம்பிச்சிருக்கோம்.
பிப்ரவரி 9 எங்களுக்குத் திருமணம்.. உங்க எல்லோருடைய வாழ்த்தும் எங்களுக்கு வேணும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement