டான் படத்தில் நடித்த மிர்ச்சி விஜய்க்கு திருமணமாகி இவ்ளோ பெரிய மகன் இருக்காரா – Cute புகைப்படங்கள் இதோ.

0
526
mirchi
- Advertisement -

னது மனைவி மற்றும் குழந்தையுடன் vj விஜய் வெளியிட்டுள்ள புகைப்படம் படு வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக இருந்து பின் நடிகராகி பலர் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த லிஸ்டில் சமீபத்தில் சேர்ந்தவர் தான் விஜய். ரேடியோ மிரச்ச்சி FM சேனலில் ஆர்ஜேவாக இருந்து வந்து பலருக்கும் பரிட்சயமான குரல் இருக்கிறது அவரது குரல்! ரேடியோ மிர்ச்சி Fm-ல் ஆர் ஜேவாக பலரின் மனதை கொள்ளை கொண்ட மிர்ச்சி விஜய் பின்னர் தொலைக்காட்சியிலும் கலக்கினார். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியை  தொகுத்து வழங்கி விஜேவாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார் ஆர் ஜி விஜய். 

-விளம்பரம்-

‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ இவரது ஆங்கரிங் ஸ்டையில் பலருக்கும் பிடித்தது. அதன் பின்னர் இவர் பல்வேறு விழாக்களிலும் தொகுப்பாளராக பணியாற்றினார். அவ்வளவு ஏன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கூட இவர் தொகுப்பாளராக பணியாற்றினார். சமீபத்தில் வெளியான RRR படத்தின் தமிழ் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

- Advertisement -

RRR இசை வெளியீட்டு விழா :

அப்போது இவர் ட்ரம்ஸ் கலைஞ்சருக்கு நன்றி தெரிவிக்க மறந்துவிட உடனே மேடைக்கு கீழ் அமர்ந்துகொண்டு இருந்த சிவகார்த்திகேயன் அவருக்கு சைகை செய்து நினைவுபடுத்தினர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. மேலும், விஜய், சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனுஷ்ஷின் Vip படம் :

ஏற்கனவே மிர்ச்சி விஜய் தனுஷ் நடித்த vip 2 படத்தில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மிர்ச்சி விஜய்க்கு கடந்த 2019 ஆம் ஆண்டு தான் மோனிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இரண்டு வருடமாக காதலித்து வந்த மோனிகா என்கிற பெண்ணை தான் மிர்ச்சி விஜய் திருமணம் செய்து கொண்டார். தனது திருமணத்திற்கு முன்னர் மிர்ச்சி விஜய் அளித்த பேட்டியில், அவங்க என் ஃப்ரெண்ட்டோட ஃப்ரெண்ட்.

-விளம்பரம்-

மிர்ச்சி விஜய் திருமணம் செய்த பெண் :

நான் கலந்துகிட்ட ஒரு நிகழ்ச்சியில் அவங்க எனக்கு அறிமுகமானாங்க. அதுக்கப்புறம் ஃப்ரெண்ட்ஸா பேச ஆரம்பிச்சோம். நல்ல நண்பர்களாக எங்களுடைய பயணம் தொடர்ந்துச்சு. இரண்டு வருஷமா காதலிக்கிறோம். இப்போ காதல், கல்யாணத்தை எட்டியிருக்கு என்றார். இவர்களது திருமணம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரசன்னா ஸ்னேஹா, ரியோ ராஜ், கணேஷ் வெங்கட் ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மிர்ச்சி விஜய்யின் மகன் :

இப்படி ஒரு நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. விஜே விஜய், தனது குழந்தைக்கு நவிலன் என்ற பெயர் வைத்துள்ளார். இந்த நிலையில் விஜே விஜய் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. விஜே விஜய்யின் க்யூட் குடும்பத்தின் புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement