சூப்பர் ஹிட் ரீ-மேக்கில் மிர்னாலினி.! ஹீரோ யாருனு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!

0
518
Mirnalini

தற்போது வேண்டுமானால் டிக் டாக் இளசுகள் மத்தியில் பிரபலமாக இருக்கலாம் ஆனால்,அதற்கு விதை டப் ஸ்மாஸ் போட்டது. இந்த டாப்ஸ்மாஷ் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் பெங்களூரில் வசிக்கும் மிருணாளினி என்பவரின் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் இணையத்தில் செம்ம வைரல்.

Related image

மிருணாளினிக்கு டப்ஸ்மாஷ் மூலம் பல பட வாய்ப்புக்கள் கிடைத்தன. தற்போது இவர் ‘நகல்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

- Advertisement -

நகல் படத்தில் இவர் நடித்து வந்தாலும் இந்த படத்தில் இவர் ஒரு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் இவரது நடிப்பும் பாராட்டபட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது மிர்னாலினி மேலும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா போன்ற பலரது நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட்டடித்த ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதர்வா நடிக்க அவருக்கு ஜோடியாக மிர்னாலினி நடிக்க இருக்கிறாராம். இந்த தகவலை அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.