ஒலிம்பிக் போட்டியில் வென்ற வீரர்களுடன் ஒப்பிட்டு தன்னுடைய வெற்றியை கூறிய மிஸ் யுனிவர்ஸ் ஹர்னாஸ் சந்துவின் கருத்துக்கு தற்போது சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் சந்து சமீபத்தில் தான் மிஸ் யுனிவர்ஸ் என்ற பட்டம் வென்றார். பஞ்சாபைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். 17 வயது முதலே இவர் மாடலிங் செய்து வருகிறார். மேலும், 2017இல் ‘மிஸ் சண்டிகர்’ என்ற பட்டத்தை வென்றார். பின் ஹர்னாஸ் சந்து 2021ஆம் ஆண்டில் லிவா மிஸ் திவா யுனிவர்ஸ் பட்டத்தையும் வென்றுள்ளார்.

மிஸ் இந்தியா பஞ்சாப் பட்டத்தை 2019 ஆம் ஆண்டும் பெற்றார். இவர் யாரா தியான் பூ பரன் (Yaara Diyan Poo Baran) மற்றும் பாய் ஜி குட்டாங்கே ( Bai Ji Kuttange) ஆகிய பஞ்சாபி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் 70வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி இஸ்ரேலில் இருக்கும் எலியாட்ஸ் என்ற பகுதியில் நடைபெற்றது. பல்வேறு உலக நாட்டு அழகிகள் இந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்து இருந்தார்கள். இதில் பஞ்சாப்பை சேர்ந்த இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சந்து பிரபஞ்ச அழகி என்ற பட்டத்தை வென்றார். தற்போது இவருக்கு வயது 21 ஆகிறது.

Advertisement

21 வருடங்களுக்கு பின் பட்டம் :

21 வருடங்களுக்கு பிறகு இந்தியாவிற்கு மீண்டும் மிஸ் யுனிவர்ஸ் என்ற பட்டம் கிடைத்தது. 2020ஆம் ஆண்டுக்கான பட்டம் வென்றவரான மெக்சிகோவை சேர்ந்த மிஸ் யுனிவெர்ஸ் ஆண்ட்ரியா மேசா தான் ஹர்னாஸ் சந்துவுக்கு மிஸ் யுனிவர்ஸ் 2021 பட்டத்துக்கான கிரீடத்தைச் சூட்டினார். மேலும், இதற்கு முன் இந்த பட்டத்தை வென்றவர் சுஷ்மிதா சென், லாரா தத்தா ஆவார். 2000ஆவது ஆண்டில் லாரா தத்தா வென்றார். அதற்கு முன் சுஸ்மிதா சென் இந்தப் பட்டத்தை 1994ல் வென்றிருந்தார். எனவே மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை மூன்றாவது முறை வென்ற இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஹர்னாஸ் சந்து.

மிஸ் யுனிவர்ஸ் ஹர்னாஸ் சந்து :

அதிலும் ஹர்னாஸ் சந்து இறுதிச்சுற்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதில் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இவருடைய சாதனைக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தார்கள். இப்போட்டியில் பராகுவேவைச் சேர்ந்த நாதியா ஃபெர்ரெய்ரா (வயது 22) இரண்டாமிடத்தையும், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த லலேலா ஸ்வான் (வயது 24) மூன்றாமிடத்தையும் பிடித்தனர். இந்த நிலையில் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற ஹர்னாஸ் சந்து தனது வெற்றியை ஒலிம்பிக் பங்கேற்பாளர்களின் வெற்றியுடன் ஒப்பீட்டு கருத்து கூறி உள்ளார்.

Advertisement

எங்களை ஏன் கொண்டாடுவது இல்லை :

அதில் அவர் கூறியது, நான் தனது அழகான முகத்தால் போட்டியில் வென்று இருக்கிறேன். இந்த வெற்றியை நான் ஒலிம்பிக் போட்டியுடன் ஒப்பிடுகிறேன். நாட்டை பெருமைப்படுத்தும் ஒரு விளையாட்டு வீரரை பாராட்டும் போது அழகு போட்டியில் ஒரு நாட்டின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று நாட்டை பெருமை அடைய செய்யும் எங்களை போன்ற அழகிகளை யாரும் பாராட்டுவது இல்லை? என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் பதிவிட்ட கருத்திற்கு சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பலரும் எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்கள்.

Advertisement

நெட்டிசன்கள் கேள்வி :

உதாரணமாக ஒரு விளையாட்டு வீரர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பயங்கர கஷ்டப்பட்டு தான் வெற்றி அடைகிறார்.அவ்வளவு எளிதாக ஒலிம்பிக் கோல்டு மெடல் கிடைப்பது கிடையாது. விளையாட்டு வீரர் கடின உழைப்பிற்கும் உங்களுடைய உழைப்பிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. தயவு செய்து விளையாட்டு வீரர்கள் வெற்றியை உங்களுடன் ஒப்பிட்டு கேலி,கிண்டல் செய்யாதீர்கள் என்று பலரும் ஹர்னாஸ் சந்து கருத்துக்கு விமர்சனம் செய்து இருக்கிறார்கள். தற்போது அவர்களின் டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement