தளபதி – தளபதி திடீர் சந்திப்பு. இணையத்தில் வைரலாகும் வீடியோ. (இதே நாளில் தான் விஜய் கடந்த ஆண்டு சைக்கிளில் சென்று ஓட்டு போட்டாரே)

0
185
stalin
- Advertisement -

தமிழக முதல்வரும் நடிகர் விஜயும் சந்தித்து கொண்ட புகைபடங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.அதோடு தளபதி விஜயின் பீஸ்ட் படம் அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

- Advertisement -

தளபதி 66 பூஜை :

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வம்சி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தளபதி 66 என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் தான் நடைபெற்றது. மேலும், இந்த படத்தின் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க இருக்கிறார். மேலும், சரத்குமாரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்க இருக்கிறார்.

ஸ்டாலின் – விஜய் சந்திப்பு :

இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் விரைவில் துவங்க இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யும் தமிழக முதல்வரும் சந்தித்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. AGS கல்பாத்தி அகோரம்-ன் மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு விழாவில் தான் இந்த சந்திப்பு நடைபெற்று இருக்கிறது. அப்போது விஜய் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் பரபரப்பாக பரவி வருகிறது.  

-விளம்பரம்-

இதே தேதியில் கடந்த ஆண்டு :

இதே தேதியில் தான் கடந்த ஆண்டு (ஏப்ரல் 6) நடிகர் விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக ஓட்டு போட சைக்கிளில் சென்று இருந்தார். அப்போது விஜய்யின் சைக்கிளில் சிகப்பு நிறமும் விஜய் அணிந்து இருந்த கருப்பு நிற மாஸ்க்கையும் வைத்து நடிகர் விஜய் தி மு கவிற்கு தான் வாக்களித்தார் என்று பேச்சுக்கள் கிளம்பி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement