இளையராஜாவின் திரை இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 70 காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசை பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இவருடைய இசையை ரசிக்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் லண்டன் மாநகரில் புதிய சிம்பொனி இசை கோர்வையை இளையராஜா அவர்கள் அரங்கேற்றம் செய்து இருக்கிறார். சிம்பொனி என்பது மேற்கத்திய இசை வடிவம். இதை வெறும் 34 நாட்களில் இளையராஜா உருவாக்கி இருக்கிறார். இது இளையராஜாவின் முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஆகும். இதன் மூலம் தமிழர்களின் பெருமை உலகெங்கும் பரவி இருக்கிறது.
இளையராஜா சிம்பொனி:
இதற்காக முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே இளையராஜாவை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். பின் இது தொடர்பாக தெரிவித்த பேட்டியில் இளையராஜா, தமிழ்நாட்டில் இருந்து லண்டன் சென்று அப்போலோ அரங்கில் சிம்பொனியை அரங்கேற்றுகிறேன். நம் பெருமையை பறைசாற்ற லண்டன் செல்கிறேன். இது என்னுடைய பெருமை கிடையாது. நம்முடைய பெருமை, தமிழ்நாட்டின் பெருமை, இந்தியாவின் பெருமை.

இளையராஜா பேட்டி:
நீங்கள் எல்லாம் சேர்ந்தது தான் நான். இன்கிரிடபில் இந்தியா போல் நான் இன்கிரெடிபில் இளையராஜா என்று கூறி இருந்தார். இதை அடுத்து லண்டனில் சிறப்பாக சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டு இளையராஜா சென்னைக்கு திரும்பி இருந்தார். நாடு திரும்பி இளையராஜாவுக்கு சிறப்பு வரவேற்பு கொடுத்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
முதல்வர் அறிக்கை:
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இளையராஜாவின் திரை இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் அரசின் சார்பாக விழா ஏற்பாடு செய்து இருக்கிறார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா அவர்கள், அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.
இலண்டன் மாநகரில் #Symphony சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி @ilaiyaraaja அவர்கள், அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.
— M.K.Stalin (@mkstalin) March 13, 2025
அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்!
ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும்… pic.twitter.com/e3Ofpt2Upq
இளையராஜாவுக்கு விழா:
அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம். ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும் என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.






