பிரபல இயக்குனரின் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் – இன்னும் 2நாள்ல இவர் படம் வேற வரப்போதே.

0
340
Mkstalin
- Advertisement -

திடீரென்று இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு முதல்வர் மு க ஸ்டாலின் சென்றிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தமிழ் சினிமா உலகில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்த இவர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் மூலம் இயக்குனர் ஆனார்.

-விளம்பரம்-

இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. மேலும், இவர் இயக்குவதும் மட்டும் இல்லாமல் படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் பீஸ்ட்.

- Advertisement -

செல்வராகவன் திரைப்பயணம்:

இந்த படத்தில் செல்வராகவன் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து செல்வராகவன் நடித்த சாணி காகிதம் படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது செல்வராகவன் படங்களில் நடித்தும், இயக்கியும் வருகிறார். தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருகிறேன் என்ற படம் உருவாகி இருக்கிறது .

நானே வருவேன் படம்:

கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் இசையமைக்கிறார். அதோடு செல்வராகவன் இந்த படத்தை இயக்குவது மட்டும் இல்லாமல் நடித்தும் வருகிறார். இன்னும் சில தினங்களில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் அவர்கள் பகாசுரன் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

செல்வராகவன் நடிக்கும் படங்கள்:

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. கூடிய விரைவில் இந்த படமும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் செல்வராகவன் வீட்டிற்கு திடீரென்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்று இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. அதாவது, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தன்னுடைய வீட்டிற்கு வந்தது குறித்து செல்வராகவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

செல்வராகவன் பதிவிட்ட பதிவு:

அதில் அவர், முதலமைச்சர் எங்களுடைய வீட்டிற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருடன் உரையாடியது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று பதிவிட்டு இருக்கிறார். இப்படி இவர் பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. ஆனால், செல்வராகவனின் வீட்டிற்கு முதலமைச்சர் சென்ற காரணம் குறித்த தகவல்தான் தெரியவில்லை. இன்னும் இரண்டு தினத்தில் செல்வராகவன் இயக்கிய நானே வருவேன் படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement