மாணவர்கள் மத்தியில் தாமு பேசுவதை தடை செய்ய வேண்டும் என்று ட்விட்டர் வாசி கூறிய கருத்திற்கு மோகன் ஜி பதில் அளித்துள்ளார். டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு காமெடி நடிகர்களான விவேக் மற்றும் தாமு கொஞ்சம் செல்ல பிள்ளைகளாக இருந்து வந்தனர் என்றே கூறலாம். அதில் காமெடி நடிகரான தாமு மறைந்த குடியரசு தலைவரின் சிறந்த மாணவன் என்றும் கூறலாம். அப்துல் கலாமின் சிந்தனைகளை மட்டுமல்ல செயல்களையும் ‘லீட் இந்தியா ‘ என்ற அமைப்பின் மூலம் மாணவர்களிடன் கொண்டு சென்று அப்துல் கலாம் கனவை நினைவாக்கி வருகிறார்.

காமெடி நடிகரான தாமு எண்ணெற்ற படங்களில் பல முன்னனி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார்.ஆனால் சமீப காலமாக இவரை திரைப்படங்களில் பெரிதாக காண முடிவதில்லை. இருப்பினும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அதிலும் இவர் பேசும் பேச்சுக்களை கேட்டு மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களே கண்கலங்கி அழுகிறார்கள்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் ஆரணியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் நடிகர் தாமு, மாணவர்கள் முன்பு உரையாற்றினார். அப்போது வழக்கம்போல உருக்கமாக பேசிய தாமுவின் பேச்சை கேட்டு மாணவர்கள் கதறி அழுதனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இப்படி ஒரு நிலையில் இந்த வீடியோவை பகிர்ந்த ட்விட்டர் வாசி ஒருவர் ‘இது மோசமானது. எப்படி பள்ளி நிர்வாகங்கள் இதை ஏற்பாடு பண்றாங்க.

மனதளவுல ஆக்கபூர்வமா நேர்மறையா மாணவர்களை தயார் செய்ய வேண்டிய இடம் பள்ளிக்கூடங்கள்.நம்பிக்கைய விதைக்க வேண்டிய இடம் வகுப்பறைகள். அவங்களை குற்றவாளிகளாக்கி அழ வெச்சுட்டு இருக்கீங்க. மனசை மோசமா பாதிச்சு அவங்க அடிப்படை நம்பிக்கையையே இது சிதைக்கும். 18 வயது கூட நிரம்பாத மாணவர்களை Guilt Trap பண்ணி மோசமான உளவியல் தாக்குதலுக்கு உள்ளாக்குறாரு நடிகர் தாமு.

Advertisement

நியாயமாய் பார்த்தால் தாமுவைக் கைது செய்ய வேண்டும். வகுப்பறைகளைத் தாண்டி பள்ளிக் கூடங்களில் உரையாடல் நிகழ்த்தப்படவேண்டும். ஆனால் இது மாதிரியான உளவியல் வன்முறையை நிகழ்ச்சி என பள்ளிகளில் பரப்புவது ஆபத்தானது. மாணவர்களின் மனநலன் சார்ந்து இவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். சமூக சூழலியலை பாதிக்கிற இவ்வகை பிற்போக்குத்தனமான நிகழ்ச்சிகளை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தடை செய்ய வேண்டும்.என்று பதிவிட்டு இருந்தார்.

Advertisement

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ள மோகன் ஜி ‘இல்ல எனக்கு புரியல.. தாய் தந்தை படும் கஷ்டங்களை எடுத்து சொல்லி, தடம் மாறாமல் படித்து நல்ல மதிப்பெண் வாங்கி பெறறோர்க்கு பெருமை சேருங்கள் என கூறுவது என்ன தவறு. இந்த மாதிரி நிகழ்ச்சிகள் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயமாக்க வேண்டும். நடிகர் தாமு அவர்களை கெளரவித்து அரசே இதை செய்ய வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement