அஜித் வீட்டு பங்க்ஷனுக்கு அழைத்தும் நான் போல,அதுக்கு இதான் காரணம் – மோகன் ஜி சொன்ன காரணம்.

0
435
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவர் செல்வராகவனை நாயகனாக வைத்து பகாசூரன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நட்டி, ராதாரவி,தரக்ஷி ,தயாரிப்பாளர் ராஜன், கூல் சுரேஷ்,லயா என்று பலர் நடித்து இருக்கின்றனர். படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இயக்குனர் மோகன் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்டை வைத்து இரண்டு படங்களை இயக்கி இருக்கிறார். இதன் மூலம் இவருக்கு அஜித்தின் பழக்கமும் ஏற்பட்டது. என்னதான் இவர் தொடர்ந்து அஜித் மச்சான் ரிச்சர்டை வைத்து படம் எடுத்து வந்தாலும் இவர் தீவிர தல ரசிகர் என்பது பலருக்கும் தெரியும். அஜித் குறித்து இவர் அடிக்கடி பல பதிவுகளை போட்டுள்ளார். திரௌபதி படம் வெளியான போதே இவரும் அஜித்தும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது.

- Advertisement -

மேலும், திரௌபதி படத்தின் டிரைலரை பார்த்து விட்டு டுவிட்டரில் தல அஜித் அவர்கள் இயக்குனரை அழைத்து பாராட்டினார் என்று தகவல் பரவியது.அதே போல தனது மச்சானுக்காக தனது ஆதரவையும் தருவதாக சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு விளக்கமளித்த மோகன் இது எல்லாம் வதந்தி. இதை நம்பாதீர்கள். இது பல வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட புகைப்படம்.

சினிமா உலகமும், அஜித் ரசிகர்களும் குழம்பி விடக் கூடாது என்பதற்காக தான் ட்விட்டரில் இதை பதிவிட்டு வருகிறேன் என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மோகன் என்னதான் தான் ஒரு தீவிர அஜித் ரசிகராக இருந்தாலும் அஜித்தை சந்தித்து தன்னால் ஒரு புகைப்படம் கூட எடுக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் மோகன்.

-விளம்பரம்-

இதற்கு விளக்கமளித்த அவர் நான் அஜித் சாரின் தீவிர ரசிகர் ரிச்சர்ட் உடன் திரௌபதி படத்தை முடித்து விட்ட பின் எனக்கு அஜித் சாரை சந்திக்கும் வாய்ப்பு அடிக்கடி கிடைத்துக் கொண்டுதான் இருந்தது அவர்களின் குடும்ப நிகழ்ச்சிகளுக்குக் கூட ரிச்சர்ட் என்னை அழைத்து வந்தார் ஆனால் நான் வேண்டும் என்று அந்த நிகழ்ச்சிக்கு எல்லாம் செல்லாமல் விட்டு விடுவேன் நான் அந்த நிகழ்ச்சிக்கு சென்றால் நிச்சயம் அஜித் சாரோடும் புகைப்படம் எடுக்க ஆசையாக இருக்கும்.

அப்படி அந்த புகைப்படம் வெளியில் வந்தால் இவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்து அதையெல்லாம் தவிர்த்து வந்தேன். எனக்கு அஜித் சாரை சந்திக்க ஆசையாக இருக்கிறது. ஆனால், பகாசுரன் இந்த எண்ணத்தை மாத்தும் இவன் இப்படி மட்டும் படம் எடுக்க மாட்டான் இப்படியும் எடுப்பான் என்ற ஒரு இமேஜ் எனக்கு கிடைக்கும். அப்போது நான் சென்று அஜித் சாருடன் சூப்பராக ஒரு புகைப்படம் எடுத்து அதை பகிர வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

Advertisement