செல்வராகவன் படத்தில் கர்ணன் பட நடிகரை கமிட் செய்த மோகன் – ஏதோ பெருசா பண்றார் போல.

0
447
selva
- Advertisement -

மோகனின் அடுத்த திரைப்படத்தின் நாயகன் குறித்த அறிவிப்பு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-
G Mohan Next Movie With Selvaraghavan | ஜி மோகன் selvaraghavan

இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

மோகன் ஜி இயக்கிய படங்கள்:

அது மட்டுமில்லாமல் இவர் இயக்கிய மூன்று படங்களிலும் ரிச்சர்ட் ரிசி தான் கதாநாயகனாக நடித்து இருந்தார். மேலும், இவருடைய அடுத்த படத்திலும் ரிச்சர்ட் ரிஷியே கதாநாயகனாக? இல்லையா? என்று பல எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் மோகன் ஜி தான் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக செல்வராகவனை களம் இறக்கி இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. தமிழ் சினிமாவுலகில் மிக பிரபலமான இயக்குனராக வலம் வந்தவர் செல்வராகவன்.

செல்வராகவன் நடிக்கும் படம்:

சமீப காலமாக இவர் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இவர் தளபதி விஜய்யின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் மீது ரசிகர்கள் பல எதிர்பார்ப்புகளுடன் இருக்கின்றன.

-விளம்பரம்-

நட்டி நட்ராஜ் நடிக்கும் படம்:

இந்த நிலையில் இயக்குனர் மோகன் ஜி அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அடுத்த படத்தின் நாயகன் குறித்த அறிவிப்பை அறிவித்துள்ளார். இவர் இயக்க இருக்கும் அடுத்த படத்தின் நாயகனாக நட்டி நட்ராஜ் நடிக்கப் போகிறார் என்று அறிவித்துள்ளார். சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் நட்டி நட்ராஜ். அதற்கு முன்பு கூட இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.

நட்டி நட்ராஜ் கதாபாத்திரம்:

இருந்தாலும் இவர் சதுரங்க வேட்டை படத்திற்கு பிறகு வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டி வருகிறார். இந்த நிலையில் நட்டி நடராஜ் அவர்கள் மோகன் இயக்கும் படத்தில் என்ன கதாபாத்திரத்தில்? நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்த தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் நடராஜின் கதாபாத்திரத்தை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

Advertisement