மோகன் ஜி குறித்தும் வீடியோவா ? சமூக வலைதளத்தில் மதனுக்கு பதிலடி கொடுத்த மோகன்

0
2583
Mohan
- Advertisement -

சமூக வலைத்தளங்களில் மிகப் பிரபலமான நபராக இருப்பவர் மதன் ரவிச்சந்திரன். இவர் ஊடகவியலாளரும், ஸ்டிங் வீடியோக்களில் பெயர் போனவருமாக இருப்பவர். இவர் சமீபத்தில் சில முக்கிய யூடியூப் பிரபலங்களின் ரகசிய வீடியோக்கள் எல்லாம் வெளியிட்டு சோசியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பி இருந்தார். அந்த வீடியோவில் youtube நெறியாளர் மாதேஷ், ஐயப்பன் ராமசாமி, முக்தார் போன்றோர் ஸ்டார் ஹோட்டலில் சரக்கு அடிப்பது, சுயநலத்துக்காக அரசியல் கட்சிகளை டம்மி செய்ய பேட்டி கொடுப்பது, பேரம் பேசுவது போன்ற அனைத்தும் பதிவாகி இருந்தது.

-விளம்பரம்-

இதனால் சில பேர் மீடியாவில் இருந்து தற்போது ஒதுங்கி இருக்கின்றனர். சிலர் மீண்டும் youtube இல் பேட்டி கொடுத்து தங்களை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மதன் ரவிச்சந்திரனின் ஸ்டிங் வலையில் இயக்குனர் மோகன் ஜியும் சிக்கி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, அகில உலக ஆன்மீக இந்து மத கட்சி தலைவர் ஆன ஜெயம் எஸ்கே கோபிக்கும் மதன் ரவிச்சந்திரனுக்கும் இடையே ட்விட்டரில் மோதல் ஏற்பட்டிருந்தது.

- Advertisement -

ஸ்டிங் ஆபரேஷன் என்ற பெயரில் எஸ்.கே கோபியை கோர்த்துவிட்டதாக மதன் ரவிச்சந்திரனை திட்டி தீர்த்து வருகிறார். எஸ்.கே.கோபிக்கு நெருக்கமானவர்களில் ஒருவர் தான் இயக்குனர் மோகன் ஜி. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மதன் ரவிச்சந்திரன் மாஸ் தமிழ்நாடு சேனலில் நிறுவனர் வெண்பா கீதாயன் சார்பில் ஜெயம் எஸ்கே கோபியையும், இயக்குனர் மோகன் ஜி-யையும் எச்சரித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், Jayam S K கோபி என்பவர் இத்தனை விஷயங்களை வெளியிடுவேன் என மிரட்டி வருகிறார்.

அதோடு அவரது நண்பர்கள் பல்வேறு வகையில் கொலை மிரட்டல்கள் விடுத்து வருவதாலும் கோபி மற்றும் Voice of savukku மேல் காவல்துறையில் புகார் கொடுக்க உள்ளோம். மதன் மேல் இருக்கும் வன்மத்தை வைத்து மதனை மட்டும் corner செய்து வீடியோக்கள் அரைகுறையாக வெளியிட்டால் பிறகு நான் மொத்தமாக KT ராகவன் விஷயத்தில் நீங்கள் சார்ந்திருக்கும் திரைப்பட இயக்குநர் மோகன் G தமிழக BJP குறித்து கொச்சையாக பேசியது, திரைப்பட நடிகைகள் பற்றி ஆபாசமாக பேசியது, ஒரு மத்திய ணை அமைச்சர் L முருகன் குறித்து கீழ்த்தரமாக பேசியது, காயத்ரி ரகுராம், சௌதாமணி, கேசவ விநாயகம் ஆகியோர் குறித்து மதனிடம் தொலைபேசியில் பேசியது மற்றும் Channel Vision தஞ்சை ஜீவா தான் செய்கின்ற எருமை பலி யாகம் பற்றி பேசிய ஆதாரங்கள் குறித்து வெளியிடப்படும்.

-விளம்பரம்-

அத்துடன் Jayam S K கோபி சார்ந்திருக்கும் இயக்குனரான மோகன் Gயும் sting இல் சிக்கியுள்ளார். அவரை Green Park hotelலுக்கு அழைத்து வந்தவர் ஊடகவியலாளர் தேன்மொழி எழில். நீங்கள் மதன் குறித்து எல்லாவற்றையும் வெளியிடுங்கள் கோபி. வெளியிடும் அன்று நான் திரைப்பட இயக்குநர் Mohan G பேசிய Sting வீடியோவை வெளியிடுகிறேன். நாங்கள் பொதுவெளிக்கு வந்தால் உங்கள் ஆட்கள் எல்லாரும் இதுபோன்ற இழிவான வேலைகளில் ஈடுபடுவீர்கள் என்பதால் நீங்களும் உங்கள் ஆட்களும் செய்யும் அத்தனை ஊழல்களையும் Sting செய்து வைத்துள்ளோம்.

நீங்கள் வன்னியர்களையும் தேவர்களையும் நாடர்களையும் குறித்து அவதூறு பேசியதற்கு ஒரு மன்னிப்பு கூட கேட்காமல் உங்களுடன் பழகிய மதனிடம் கம்பு சுற்றுவதில் உங்கள் தராதரம் என்னவென்று மக்களும் சினிமா துறை சார்ந்தவர்களும் அறிவார்கள். இவ்வாறு நீங்கள் பழகும் சினிமாக்காரர்களிடமும் அரசியல்வாதிகளிடமும் அவர்கள் PAகளையும் பாதுகாப்பு ஆட்களையும் வைத்து வேவு பார்த்து வருகின்றீர்கள் என உங்கள் tweets மூலம் இப்போது அவர்களும் அறிந்து கொள்வார்கள்’ என அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு இயக்குனர் மோகன் ஜி அவர்கள், வாங்க மதன், நானும் தயாரா தான் இருக்கேன். திருப்போருர் பற்றி பேச நிறைய பேசனும் என்று மதன் ரவிச்சந்திரனுக்கு சவால் விட்டு இருக்கிறார்.

Advertisement