வாத்தி கூட பகாசூரன் மோதுதுனு சொல்றதுக்கே கூசுது – வலைப்பேச்சு ஆனந்தன் பேச்சுக்கு மோகன் பதிலடி.

0
689
bakasuran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

பகாசூரன்

அது மட்டுமில்லாமல் இவர் இயக்கிய மூன்று படங்களிலும் ரிச்சர்ட் ரிசி தான் கதாநாயகனாக நடித்து இருந்தார். மேலும், இவருடைய அடுத்த படத்திலும் ரிச்சர்ட் ரிஷியே கதாநாயகனாக? இல்லையா? என்று பல எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் மோகன் ஜி தான் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக செல்வராகவனை களம் இறக்கி இருக்கிறார். தற்போது செல்வராகவனை வைத்து பகாசுரன் படத்தை இயக்கி இருக்கிறார்.

பகாசூரன் Vs வாத்தி :

இந்நிலையில், பகாசூரன் படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இயக்குநராக இருந்து நடிகரான செல்வராகவனை மாறுபட்ட கோணத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.  இதே நாளன்று தனுஷின் ‘வாத்தி’ படமும் வெளியாகிறது. செல்வராகவன் – தனுஷ் படங்கள் ஒரேநாளில் வெளியாவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

ஆனந்தன் பேச்சு :

இதனால் எந்தப் படம் வெல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படி ஒரு நிலையில் பிரபல சினிமா விமர்சகரான வலைப்பேச்சு ஆனந்தன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அப்போது அவரிடம் ‘அண்ணன் தம்பி படம் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது. அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்க்கு பதில் அளித்த அவர் ‘வாத்தி என்ன ஒரு படம், என்ன ஒரு பட்ஜட், என்ன ஒரு தரம், அதுகூட இந்த படம் மோதுதுனு அந்த படத்தை சொல்றீங்களே இதுல என்ன தரம் இருக்கு.

மோகன் பதிலடி :

இவருடைய சினிமா அனுபவம் என்ன, இதற்கு முன் இவர் எடுத்த படத்தின் தரம் என்ன. வாத்தி படத்தை இந்த படத்துடன் ஒப்பிடுவதற்கு கூசுகிறது’ என்று கூறி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள மோகன் ‘சார்.. நீங்க பகாசூரன் படத்தை பற்றி பேசவே வேணாம் சார்..அதான் நல்லது.. ஓரமா நின்னு வேடிக்கை மட்டும் பாருங்க சார்.. நாங்க போட்டி போடுற அளவுக்கு பெரிய பட்ஜெட் இல்ல தான் சார்.. ஆனா நிச்சயம் பேசப்படுவோம்.. இன்னும் 17 நாள் தான் சார் இருக்கு.. பாருங்க.. என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement