இவனுங்கள கேட்க ஆளில்லை சினிமால – சேரனுக்கு ஆதரவாக சீரிய மோகன் ஜி. இதான் காரணம்.

0
1847
Mohan
- Advertisement -

தமிழ்க்குடிமகன் படம் குறித்த விமர்சனத்திற்கு இயக்குனர் மோகன் ஜி அளித்திருக்கும் பதில் தான் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் சேரன். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் இருந்தார்.

-விளம்பரம்-

அந்த வகையில் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டு இருந்தது. அதோடு வசூல் சாதனை பெற்று இருந்தது. பெரும்பாலும் இவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் வித்தியாசமாக இருப்பதால் இவருடைய படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும். மேலும், சேரன் அவர்கள் இயக்கிய பல படங்கள் தேசிய விருதுகளை வாங்கி இருக்கிறது. பின் இடையில் சில காலம் சேரன் படம் இயக்குவதில் இருந்து விலகி இருந்தார்.

- Advertisement -

சேரன் திரைப்பயணம்:

பிறகு இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் சேரன் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சேரன் இயக்கி நடித்த படம் ராஜாவுக்கு செக். இந்த படம் எமோஷனல், திரில்லர், ஆக்ஷன், காமெடி என எல்லாம் கலந்த கலவைகளை கொண்டு இருந்தது.

தமிழ்க்குடிமகன் படம்:

அதோடு இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு சேரன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு ‘. இந்த படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. குடும்பப் பாச கதையை மையமாக கொண்ட இந்த படம் ரசிர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது சேரன் படங்களில் பிசியாக இருக்கிறார். அந்த வகையில் கடந்த வாரம் சேரன் நடிப்பில் வெளிவந்த படம் தமிழ்க்குடிமகன். இந்த படத்தை இயக்குனர் இசக்கி கார்வண்ணன் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

சேரன் குறித்த விமர்சனம்:

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் சேரன் பெரியாருக்கு எதிரான வசனங்கள் பேசி இருந்தார் என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்க்குடிமகன் படம் குறித்த விமர்சனத்திற்கு இயக்குனர் மோகன் ஜி அளித்திருக்கும் பதில் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, தமிழ்க்குடிமகன் படத்தில் ஜாதியை பற்றி சேரன் பேசியிருப்பார். அதே அவர் இயக்கிய பாரதி கண்ணம்மா படத்திலும் ஜாதி வைத்து பேசி இருப்பார். அப்போ ஒன்னு இப்ப ஒன்னு மாத்தி மாத்தி சொல்லுவீங்களா என்று சேரனை விமர்சித்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்க விட்டிருந்தார்கள்.

மோகன் ஜி பதிவு:

இதை பார்த்த இயக்குனர் மோகன் ஜி அவர்கள் சேரனுக்கு ஆதரவாக பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், ஏன்டா.. நீங்க நினைக்குறத மட்டும் தான் படமா எடுக்கனுமாடா.. 100 பேரு ஒன்னா பேசி வச்சிட்டு இந்த மாதிரி படத்தை எல்லாம் தப்பான படமா மக்களிடம் கருத்துருவாக்கம் பண்ணுறீங்க.. தொடர்ந்து இவனுங்க கூட்டம் இந்ந #தமிழ்க்குடிமகன் படத்தை பத்தி தப்பாவே பேசுவானுங்க.. இவனுங்கள கேட்க ஆளில்லை சினிமால என்று கூறி இருக்கிறார்.

Advertisement