ருத்ர தாண்டவம் படத்தில் திருமாவளவனை குறிப்பிட்டே ஒரு கதாபாத்திரத்தை வைத்துள்ளதாக பகிரங்கமாக கூறி இருக்கிறார் மோகன். திரௌபதி படத்தைத் தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் ருத்ரதாண்டவம். இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளார்கள். போதை பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் PCR சட்டம் பற்றியும் கூறி இருக்கிறார் மோகன்.

வீடியோவில் 9 : 30 நிமிடத்தில் பார்க்கவும்

போதைப்பொருள் கடத்தல் எப்படி நடைபெறுகிறது, போதைப்பொருள் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை மிக அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தினால் அவரது குடும்பம் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை உணர்வுபூர்வமாக காட்சிகளால் விளக்கி இருக்கிறார்.நாடகக் காதல், வசனம், சாதிப் பெருமிதம் இதிலும் உண்டு. 

Advertisement

கஞ்சா விற்பனை, போதைப் பொருட்களை விற்கும் சிறுவர்கள்- இளைஞர்கள் அனைவரும் ஒரே சமூகத்தை, வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருப்பதுதான் முரணாக உள்ளது. ஏற்கனவே மோகன் இயக்கிய திரௌபதி திரைப்படத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் தான் நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்கள் என்பது போல சித்தரிக்க பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதேபோல திரௌபதி திரைப்படத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் குறிப்பிடும் வகையில் ஒரு கதாபாத்திரம் கட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த நிலையில் ருத்ரதாண்டவம் திரைப்படத்திலும் திருமாவளவனை போன்று உருவம் கொண்ட ஒரு கதாபாத்திரத்தை வைத்திருக்கிறார். இது ட்ரைலரிலேயே அப்பட்டமாக தெரிந்தது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மோகன் திரௌபதி படத்தில் வேண்டுமென்றே வைக்கவில்லை. ஆனால், இந்த படத்தில் நான் அவரை தான் குறிப்பிட்டு இருக்கிறேன் என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.

Advertisement
Advertisement