கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகவே இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. அதிலும் தற்போது கேரளாவில் கொரோனாவின் பரவல் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் தினசரி கொரோனா பரவலில் கேரள மாநிலம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதையொட்டி கேரள கோயில்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்களை அனுமதிக்கிறார்கள். அதிலும் குருவாயூர், சபரிமலை போன்ற கோயில்களில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும், கடந்த சில மாதங்களாகவே குருவாயூர் கோயிலில் வளாகத்துக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பிரபலமாக இருந்தாலும் வளாகத்துக்குள் வாகனத்தில் செல்ல முடியாது என்று அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் செய்த செயல் தற்போது கேரளாவில் கடும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

இதையும் பாருங்க : சூரி வீட்டு திருமணத்தின் போது நகை திருட்டு – எத்தனை பவுன் தெரியுமா ? போலீசில் விசாரணை.

Advertisement

மலையாள மொழியில் சூப்பர் ஸ்டார் என்ற படத்தை பெற்றவர் மோகன்லால். இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. இவர் மலையாளத்தில் மட்டும் இல்லமல் தமிழ் மொழி படங்களிலும் நடித்து உள்ளார். இந்த நிலையில் நடிகர் மோகன்லால் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு தன் மனைவியுடன் குருவாயூர் கோயிலில் தரிசனம் செய்ய வந்து உள்ளார். அவரது வாகனம் கோவில் வாசல்வரை வந்து உள்ளது.

இவரை அனுமதித்த கோயில் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளார்கள். அதோடு இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தடையை மீறி நடிகர் மோகன்லால் வாகனத்தை அனுமதித்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 ஊழியர்களை கோயில் நிர்வாகம் அதிகாரிகள் உடனடியாக பணி இடைநீக்கம் செய்து உள்ளார்கள். மேலும், இதுதொடர்பாக அவர்கள் மீது விசாரணையும் நடைபெற்று வருகிறது. தற்போது தகவல் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறது.

Advertisement
Advertisement