விஜயின் தளபதி 69 படம் குறித்து இயக்குனர் நெல்சன் கூறி இருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்கள் பெரும் தோல்வியை தழுவியது.

இருப்பினும் வசூல் ரீதியாக அந்த படங்கள் வெற்றி கண்டது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருந்தது. இப்படத்தில் சஞ்சய் தட், கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருந்தார்கள். விஜய்யின் லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

Advertisement

விஜய் கோட் படம்:

இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், இவானா உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு கோட் G.O.A.T Greatest of all time என்று பெயரிடப்பட்டிருக்கிறது. தற்போது இந்த படத்தினுடைய வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விஜய் நடிக்கும் கடைசி படம்:

இதை அடுத்து ஒரு படத்தில் மட்டும் விஜய் நடிக்க இருக்கிறார். ஆனால், அந்த படத்தை யார் இயக்குகிறார்கள்? என்ற தகவல் தெரியவில்லை. எச். வினோத், லோகேஷ், நெல்சன்,வெற்றிமாறன் என்று பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடி விஜய் அவர்கள் அரசியலில் களமிறங்கி இருக்கிறார். இவர் தன்னுடைய கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைத்திருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

விஜய் அரசியல்:

அது மட்டுமில்லாமல் அடிக்கடி விஜய் அவர்கள் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தி வருகிறார். 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவதாகவும் இருக்கும் கூறியிருக்கிறார். விஜய் அரசியலுக்கு வருவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் அவர் சினிமாவில் இருந்து விலக இருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் தளபதி 69 படம் குறித்து விருது வழங்கும் விழா ஒன்றில் நெல்சன் கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, விருது வழங்கும் விழாவில் நெல்சனிடம், உங்களுக்கு விஜயின் கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதில் வேறு எந்த நடிகர்களை எல்லாம் கொண்டு வருவீர்கள்? என்று கேட்டிருக்கிறார்கள்.

Advertisement

நெல்சன் கொடுத்த பதில்:

அதற்கு நெல்சன், விஜயின் 69 படத்தில் நடிக்க தெலுங்கில் இருந்து மகேஷ்பாபு, மலையாளத்தில் இருந்து மம்மூட்டி, ஹிந்தியில் இருந்து ஷாருக்கான் போன்ற மூன்று ஸ்டார்களையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பேன். அது மட்டும் இல்லாமல் கதாநாயகி யார் என்று கேட்டதற்கு அவர் தன்னுடைய முதல் பட நடிகை நயன்தாராவின் பெயரை தான் சொல்லி இருந்தார். கடைசியாக நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த படம் ஜெயிலர். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்திருந்தது. இந்த படத்தில் நெல்சன் அவர்கள் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி சிராஃப் ஆகிய மூன்று ஸ்டார்களை ரஜினியின் நண்பர்களாக நடிக்க வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement