லோகேஷ்ஷின் தற்போதைய நிலை என்ன? வீ டியோவை வெளியிட்ட அடடேய் கோபி.

By Rajkumar · 2/3/2020

பொதுவாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நபர்கள் சென்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சமீப காலமாக காமெடி நடிகர்கள் பலரும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற வண்ணம் இருந்து வருகிறார்கள் அந்த வகையில் லோகேஷ் என்பவரும் ஒருவர்காமெடிக்கு என இருக்கும் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் லோகேஷ் பாப். இவர் இந்த காமெடி தொலைக்காட்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். ஆதித்யா மொக்கை ஆப் தி டே என்ற நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மத்தியில் பிரபலமானவர் லோகேஷ் பாப்.

மேலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளி வந்த படம் நானும் ரவுடி தான் த படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து இருந்தார். அந்த காமெடி சீன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. அதன் பின்னர் லோகேஷ் பாப் ஒரு சில படங்களில் கூட நடித்திருக்கிறார். சமீப காலமாக ஆதித்யா தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் காமெடி நடிகர் லோகேஷ் பாப் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தலையில் அடிபட்ட காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் பாருங்க : ராட்சசன் படத்தில் வந்த சைக்கோ வில்லனை இதுவரை இந்த படத்தில் நோட் பண்ணி இருக்கீங்களா ?

இந்த நிலையில் மொக்கை ஆஃப் தி டே நிகழ்ச்சியில் லோகேஷுடன் கலக்கிய குட்டி கோபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லோகேஷ் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதலில் அனைவருக்கும் நன்றி 3 நாட்களுக்கு முன்பாக என்னுடைய நண்பருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னதும் சன் நெட்வொர்க் அவரது முழு செலவையும் பார்த்துக்கொள்கிறோம் என்று சொன்னார்கள். மேலும் அவருக்கு உதவியாக இருக்கட்டுமே என்று நாங்கள் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பணத்தை திரட்ட உதவி கேட்டிருந்தோம்.

https://www.instagram.com/tv/B9LlMZSAjKK/?igshid=devivq8gl7sy

அதனை கண்டு பலர் உதவி செய்தார்கள் பல ஹீரோக்களும் பல காமெடி நடிகர்களும் பண உதவி செய்தார்கள் தற்போது சிகிச்சைக்கு தேவையான பணத்தை நாங்கள் சேர்த்துவிட்டோம். எனவே, அந்த பதிவை இனி யாரும் பகிர வேண்டாம். தற்போது லோகேஷ் உடல்நலம் தேறி விட்டார். எங்களுடைய சன் குடும்பத்திற்கு நன்றி. மேலும் அவர் நாளை சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டார் விரைவில் அவர் வீடு திரும்பிவிடுவார். நன்றி என்று தெரிவித்துள்ளார் குட்டி கோபி.

behindtalkies AMP · Quick view
View full