தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான “முண்டாசுப்பட்டி” என்ற முழுநீள காமெடி காமெடி படத்தை தொடர்ந்து, இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘ராட்சசன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. முண்டாசுப்பட்டி படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் மூலம் விஷ்ணு விஷால் மற்றும் ராம் குமார் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்தனர். விஷ்ணு விஷால், அமலா பால், முனீஸ்காந்த், அம்மு அபிராமி என்று பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
ஆனால், விஷ்ணு விஷாலை விட இந்த படத்தின் மூலம் அதிகம் பேசப்பட்டது இந்த படத்தில் சைக்கோ வில்லனாக அசத்திய நடிகர் சரவணன் தான். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவான இந்த படத்தில் வில்லன் நடிகராக நடித்திருந்த கிறிஸ்டோபர் என்ற கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் மறக்க முடியாத ஒரு தடத்தை ஏற்படுத்தி இருந்தது. பலரும் அந்த கிறிஸ்டோபர் யார் என்று இணையத்தளத்தில் தேடிக்கொண்டு இருந்தனர்.
பின்னர் ராட்சசன் படத்தின் 25 வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சரவணன் என்பவரை அறிமுகம் செய்தனர். அவருடைய உண்மையான பெயர் சரவணன், படத்தில் கொடூரமான வில்லனாக இருந்த சரவணன் நேரில் மிகவும் பவ்யமான சாது போல தோற்றமளித்தார். ராட்சசன் படத்திற்கு பின்னர் வேறு எந்த படத்திலும் இவரை காண முடியவில்லை.
ஆனால், இவர் ராட்சசன் படத்திற்கு முன்பாகவே தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மௌனகுரு படத்தில் இவர் நடித்திருக்கிறார். அருள்நிதி இனியா ஜான் விஜய் காஜல் பசுபதி போன்ற பலர் நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் காஜல் பசுபதியின் நண்பர்களில் ஒருவராக நடிகர் சரவணன் நடித்துள்ளார்.காபி ஷாப் காட்சியிலும், போலீஸ் அருள்நிதியை என்கவுண்டரில் கொள்ள முயற்சிக்கும் காட்சிகளும் இவரை நீங்கள் தெளிவாக கண்டிருக்கலாம்.